Aeroponics in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் வளி வளர்ப்பு விவசாயம் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தியாவின் முதுகெலும்பு என்று விவசாயத்தையும் விவசாயம் செய்யும் விவசாயிகளையும் தான் கூறுகின்றோம். விவசாயத்தை பொறுத்தவரை இன்று பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மனிதன் இயற்கையோடு ஒன்றிணைந்து நமக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விவசாயம் என்று கூறுகிறோம். இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை சேகரித்து வைத்து அதை பயன்படுத்தி கொள்வதையும் விவசாயம் என்று கூறலாம். அந்த வகையில் இன்று நாம் வளி வளர்ப்பு முறையை பயன்படுத்தி விவசாயம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் பாருங்கள் 👉 இயற்கை விவசாயம் செய்வது எப்படி
வளி வளர்ப்பு விவசாயம் என்றால் என்ன..?
விவசாயம் செய்வதற்கு அடிப்படை தேவையாக இருப்பது மண் மற்றும் நீர் தான். ஆனால் மண் இல்லாமல் செடிகளை வளர்க்கும் அளவிற்கு இன்றைய காலம் வளர்ந்து விட்டது. அப்படி மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறையை வளி வளர்ப்பு என்று கூறுகிறோம்.
இந்த வளி வளர்ப்பு விவசாய முறையை ஆங்கிலத்தில் ஏரோபோனிக் (Aeroponics) என்று கூறுகிறோம். இந்த வளி வளர்ப்பு முறையை மிகவும் பழமையான ஒரு அறிவியல் முறை என்று கூறலாம்.
இந்த காலகட்டத்தில் இந்த வளி வளர்ப்பு முறை ஒரு சிறந்த தொழில்நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது. மண்ணில்லாமல் விவசாயம் செய்ய முடியும் என்பதை இந்த வளி வளர்ப்பு முறை நிரூபித்துள்ளது.
தாவரங்களை சாதரணமாக மண்ணில் வளர்க்காமல், அதை மாற்று முறையில் காற்று அல்லது மூடுபனியினால் வளர்க்கப்படும் முறைக்கு வளி வளர்ப்பு என்று பெயர்.
அதாவது, இந்த முறையில் தாவரங்கள் மண்ணில் வளர்க்கப்படுவது இல்லை. மண்ணிற்கு பதிலாக காற்று அல்லது மூடுபனியினால் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்த வளி வளர்ப்பு முறை நீரியல் மற்றும் உயிரணு வளர்ப்பு முறையில் இருந்து மாறுபட்டது என்று கூறலாம். இதுபோல மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் மற்ற முறைகளில் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்த வளி வளர்ப்பு விவசாய முறையில் ஊடகங்கள் என்று ஏதும் பயன்படுத்துவதில்லை. இந்த வளி வளர்ப்பு முறையில் செடிக்கு தேவையான நீர் பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் செலுத்தப்படுகிறது.
இந்த முறையில் தேவையான நீரை சேமித்து வைத்து கொள்ள தேங்காய் நார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வளி வளர்ப்பு விவசாயம் நன்மைகள்:
- இந்த முறையில் 90% நீரை சேமித்து வைக்க முடியும்.
- வளி வளர்ப்பு முறையில் மூடப்பட்ட பைப்பில் இருக்கும் துளைகள் வழியாக செடிகள் வளர்க்கப்படுவதால் எளிதில் நீர் ஆவியாகும் பிரச்சனை கிடையாது.
- இந்த விவசாயத்திற்கு உரம் தேவையில்லை என்பதால் பூச்சி தாக்குதலும் இருக்காது.
- மண் சார்ந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |