அரளி செடி வளர்ப்பு
இந்த அரளி செடி சிலர் வீட்டில் பூத்து குலுங்களும், அதனை பார்பதர்க்கு அவ்வளவு ஆசையாக இருக்கும் ஆனால் நம்முடைய வீட்டில் வளர்த்தால் அது ஒரு அடி கூட வளராமல் இருக்கும். இந்த பூக்களை அதிகமாக பூ கடைகளில் பார்த்திருப்போம்.
அதுபோல் பை பாஸ் ரோட்டில் மஞ்சள் நிறம் வெள்ளை நிறம், ரோஸ் நிறத்தில் இருக்கும். அந்த பூக்களை மட்டும் வைப்பது எதற்காக என்று தெரிந்துகொள்ள நெடுஞ்சாலையில் சிவப்பு அரளி செடிகளை மட்டும் வளர்ப்பது ஏன் தெரியுமா? இதனை தொடர்ந்து நம் விட்டு மொட்டை மாடியில் அரளி செடி வளர்க்க டிப்ஸ் தெரிந்துகொள்ளுவோம் வாங்க..!
Arali Poo Chedi Valarpathu Eppadi:
மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..! |
ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது? |
டிப்ஸ்: 1
நீங்கள் அரளி செடி வளர்க்க முதலில் நன்றாக உள்ள செடியின் நல்ல மொத்தமாக அதாவது ஒரு பென்சில் அளவு உள்ள 3 காம்புகளை கொண்ட ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளவும்.
டிப்ஸ்: 2
இப்போது எடுத்த செடியில் அடி பகுதியில் சாய்வாளாக கட் செய்துகொள்ளவும்,
டிப்ஸ்: 3
இப்போது ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவும் அதில் ஒரே அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் கட் செய்து வைத்த அந்த அரளி குச்சியை போட்டு வைக்கவும். 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றிக்கொண்டு இருங்கள்.
டிப்ஸ்: 4
இப்படி தொடர்ந்து 20 நாட்கள் வைத்தால் அதிலிருந்து வேர் வர ஆரம்பித்து விடும். அதன் பின் அதனை நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்.
டிப்ஸ்: 5
இப்போது உங்கள் வீட்டு வாசலில் வைக்க வேண்டுமென்றால் முதலில் குழியை தொண்டி அதில் நம்முடைய செடியை எடுத்து வைக்கவும்.
டிப்ஸ்: 6
செடியை வைத்துவிட்டு இரு வேளையும் தண்ணீர் ஊற்றவும். இதற்கு தனியாக எந்த உரமும் போட வேண்டாம் அப்படி வேண்டுமென்றால் டீ தூள், காய் கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றலாம்.
டிப்ஸ்: 7
இந்த அரளி செடியில் நிறைய விதமான நிறங்கள் உள்ளன, இது எல்லா மண்ணிலும் வளரக்கூடியது, இதற்கு அதிக பனி தாங்க முடியாது.
இனி யாரு வீட்டிலும் வளர்க்க முடியும் அரளி செடி. அதுவும் 20 நாட்களிலும் உங்கள் வீட்டிலும் அரளி செடி வளர்க்க முடியும்.
இதையும் வளர்த்து பாருங்கள் 👉👉 உங்கள் வீட்டிலும் அடுக்கு நந்தியாவட்டை பூச்செடி வளர்க்க ஆசையா..? அப்போ இப்படி செய்யுங்கள்..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |