வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்டில் உள்ள சுண்டக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..!

Updated On: March 27, 2023 1:17 PM
Follow Us:
Homemade Fertilizer for Turkey Berry Plants in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Turkey Berry Plants in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே மாடித்தோட்டம் அல்லது வீட்டில் உள்ள சிறிய இடத்திலேயும் செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. அப்படி பலரின் மாடித்தோட்டத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு முக்கியமான செடி என்றால் அது சுண்டைக்காய் செடி தான். அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் சுண்டைக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க வில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு.

ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சுண்டைக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => மிளகாய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ஊற்றினால் போதும்

Natural Fertilizer for Turkey Berry Plants in Tamil:

Natural Fertilizer for Turkey Berry Plants in Tamil

சுண்டைக்காயில் பல நன்மைகள் உள்ளது என்று நாம் அனைவருக்குமே தெரியும் அதனால் தான் அதனை பலரும் தங்களின் வீட்டில் வளர்க்கிறார்கள். அப்படி நாம் வளர்க்கும் சுண்டைக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

தேவையான பொருள்:

  1. அரிசி கழுவிய தண்ணீர் – 4 லிட்டர் 
  2. காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு 
  3. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  4. வேப்பம் புண்ணாக்கு  2 கைப்பிடி அளவு 
  5. இஞ்சி – 2 சிறிய துண்டு
  6. பூண்டு – 20 பற்கள் 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்

இஞ்சி பூண்டினை அரைக்கவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 சிறிய துண்டு இஞ்சி மற்றும் 20 பற்கள் பூண்டினையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் 4 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு பசையை சேர்க்கவும்:

அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பசையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்கறி கழிவினை சேர்க்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

கடலை புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.

ஒரு வாரம் கழித்து இந்த கலவையை உங்களின் சுண்டைக்காய் செடிகளுக்கு ஊற்றுங்கள் அல்லது ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் சுண்டைக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now