செடிகளை அதிகம் பாதிக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் மருந்து தயார்..!

Advertisement

செடிகளில் வெள்ளை பூச்சி விரட்ட | How to Get Rid of Little White Bugs on Plants Naturally in Tamil

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் சரி வருடம் வருடம் மகசூல் செய்யும் விவசாயிகளுக்கும் சரி தண்ணீர் பிரச்சனை பனி பிரச்சனை என்று ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். எப்படி செடிகளை பாதுகாப்பது, மற்றும் அதனை பூச்சிகளிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று தினசரி ஏதோ ஒரு பிரச்சனை வருகிறது.

இதனை பாதுகாக்க கடையில் விற்கும் உரங்களை வாங்கி செடிகளில் தெளித்தாலும், அந்த காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதால் அதிகளவு விவசாயிகள் யாரும் செயற்கை உரங்களையும் பூச்சி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துவதில்லை..! ஆகவே வீட்டிலேயே எப்படி இயற்கை முறையில் பூச்சிமருந்துகளை தயாரிப்பது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளவோம்..!

Natural Medicine to Repel Plant Pests in Tamil:

பொதுவாக வீட்டில் இருக்கக்கூடிய செடிகளையும் அதிகமாக பூச்சிகள் தான் தாக்குகிறது. மேலும் அதனை தடுக்க முடியாமல் செடிகள் வளராமல் காய்ந்து விடுகிறது. ஆகவே அதனை சரி செய்ய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள் பூச்சிகளை விரட்ட பெரிதும் உதவுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய 3 பொருட்கள் பூண்டு, இஞ்சி, மிளகாய் போதும். அது எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பூச்சி கொல்லி மருந்து பெயர்கள்

ஸ்டேப்: 1 

தோல் நீக்கப்பட்ட நாட்டு பூண்டு 180 கிராம், இஞ்சி 90 கிராம், பச்சை மிளகாய் 90 கிராம் சேர்த்து முதலில் மிக்சியில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த பேஸ்டை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 2

How to Get Rid of Little White Bugs on Plants Naturally

15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இந்த தண்ணீரில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை நன்கு கலந்து விடவும். பின்பு அதனை வடிகட்டியை வைத்து வடிகட்டிக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

How to Get Rid of Little White Bugs on Plants Naturally

10 லிட்டர் தெளிப்பானிற்கு வடிகட்டிய கரைசலையும் 100 மில்லிமீட்டர் காதி சோப்பு ஆகியவற்றை சேர்த்து குச்சியினால் கலந்துவிட்டு உபயோகப்படுத்தலாம். உங்கள் தோட்டத்தை பொருத்தும் செடிகளில் உள்ள பூச்சிகளை பொருத்தும் இந்த கரைசலில் அளவு  மாறுபடும்.

இதனை செடிகளுக்கு அடித்து வந்தால் நன்றாக செடிகள் வளரும். மேலும் செடிகளில் பூச்சிகள் முட்டையிடுவதையும் தவிர்க்கும். இதனை காய்கறி செடிகளுக்கு மட்டும் அடிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய செடிகளுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.!

இதையும் தெளித்து பாருங்கள் 👉👉 இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement