கொத்தமல்லி செடி வீட்டிலையே வளர்க்கலாம்..

Advertisement

கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி.?

கொத்தமல்லி உணவில் நறுமணத்தையும், ருசியையும் தர கூடியது. ஆனால் இதனை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் வீட்டிலேயே கொத்தமல்லி செடி எளிமையான முறையில் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க. இந்த செடியை பலரும் வீட்டில் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலேயே கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி.?

வீட்டிலேயே எளிமையான முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

கற்றாழை செடி வீட்டில் ஈசியாக வளர்வதற்கு இதை மட்டும் Follow பண்ணுங்க.. 

விதை விதைக்கும் முறை:

கொத்தமல்லி விதை தேவையான அளவு எடுத்து கொள்ளவும். இதனை ஒரு துணியில் உள்பகுதியில் வைத்து துணியை மடித்து விட்டு சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி தேய்க்கவும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கொத்தமல்லி விதை இரண்டாக உடைய வேண்டும். முக்கியமாக தூளாக உடைத்து விட கூடாது.

கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி

உடைத்த கொத்தமல்லி விதையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.

மண் கலவை:

உங்கள் வீட்டில் இடம் இருந்தால் கீழேயும் வளர்க்கலாம், இல்லையென்றால் grow bag அல்லது மண் சட்டி எடுத்து கொள்ளவும். நீங்கள் எதில் வளர்த்தாலும் மண், மண்புழு உரம், சாணம் போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி

இந்த மண்ணில் விதைகளை அப்படியே சேர்க்காமல் மண்ணில் கோடு கோடாக போட்டு கொள்ளவும்.

கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி

அந்த கோட்டினில் ஊற வைத்த கொத்தமல்லி விதையை சேர்த்து கொள்ளவும். பிறகு மண்ணை லேசாக மூடி கொள்ளவும். ரொம்ப அழுத்தம் கொடுக்க தேவையில்லை.

எப்போது செடி வளர ஆரம்பிக்கும்:

தண்ணீர் ஊற்ற கூடாது, தெளித்து விட்டாலே போதுமானது. நீங்கள் விதை விதைத்து 11-ம் நாள் செடிகள் துளிர்த்து வந்துவிடும்.

முக்கியமாக கொத்தமல்லி செடியில் வெயில் அதிகமாக பட கூடாது. ஈரப்பதம் எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்போது தான் செடிகள் செழித்து வளரும்.

அறுவடை:

how to grow coriander at home from seeds in tamil

கொத்தமல்லி செடியில் பூக்கள் வந்துவிட்டால் இலைகளை அறுவடை செய்வதற்கு உகந்ததாக இருக்கும். அதனால் அப்போது கொத்தமல்லி செடிகளை அறுவடை செய்யலாம்.

மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement