How To Grow Coriander At Home
இன்றைய பதிவில் கொத்தமல்லி செடி வீட்டில் வளர்க்கும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்குமே வீட்டில் செடிகள் வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். இன்றைய நிலையில் பல மக்கள் தன் வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்ல போனால் மாடி தோட்டத்தில் விவசாயமே செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
அதுபோல கொத்தமல்லி இலையை நாம் பார்த்திருப்போம். அது பார்ப்பதற்கு அழகாகவும் நறுமணம் வீசக் கூடியதாகவும் இருக்கும். இந்த செடியை பலரும் வீட்டில் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம் பெறலாம்..! |
கொத்தமல்லி செடி:
நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் அனைத்து உணவுகளில் கருவேப்பிலை எப்படி சேர்க்கபடுகிறதோ அதேபோல கொத்தமல்லி இலையும் சேர்க்கப்படுகிறது. கொத்தமல்லி இலையை நறுமணம் கொண்ட தாவரம் என்று கூறலாம். இது பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இந்த கொத்தமல்லி செடியை உங்கள் வீட்டில் வளர்ப்பதற்கு மண் தேவைப்படும். அந்த மண் கட்டி இல்லாமல் உதிரி மணலாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த செடிகளின் வேர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கும்.இந்த செடிகளை நீங்கள் நிலத்திலும் வளர்க்கலாம். அல்லது தொட்டிகளிலும் வளர்க்கலாம். இந்த கொத்தமல்லி செடி வளர்ப்பதற்கு உரம் என்று எதுவும் தேவை கிடையாது.
மாடித்தோட்டம் புதினா செடி வளர்ப்பு முறை..! Pudina valarpu in tamil..! |
கொத்தமல்லி செடி வளர்ப்பு முறை:
தொட்டிகளில் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையான அளவு ஒரு தொட்டியை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் உதிரியான மணலை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் மண் கட்டி இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்து கொத்தமல்லி விதைகளை இரண்டு பாதியாக உடைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் நாம் எடுத்து வைத்துள்ள மணலில் இந்த விதைகளை எல்லாப் பக்கமும் பரவுவது போல தூவ வேண்டும். பின் அதன் மேல் கொஞ்சம் மணலை தூவ வேண்டும். பின் இதற்கு தேவையான அளவு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இந்த கொத்தமல்லி செடி வளர்ந்து வரும் வரை அதற்கு தண்ணீரை ஊற்றாமல் கைகளால் எடுத்து தெளிக்க வேண்டும். இதற்கு காலை மாலை என்று இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.இந்த செடிக்கு எப்பொழுதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். 5 நாட்களில் இந்த செடி துளிர்விட ஆரம்பித்துவிடும். பின் 10 – 15 நாட்களில் கொத்தமல்லி செடி நன்றாக முளைத்து வந்துவிடும். இந்த செடி வளர்ந்து வந்ததும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இந்த கொத்தமல்லி இலைகளை நீங்கள் உங்கள் வீட்டிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். காய்கறி கடைகளிலும் விற்கலாம்.
முகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..! |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pasumai Vivasayam in Tamil |