கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

How To Grow Curry Leaves Faster at Home in Tamil

Karuveppilai Maram Valarpathu Eppadi

கறிவேப்பிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அணைத்து சமையலிலும் கருவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. இதனால், அனைவரது வீட்டிலும் கருவேப்பிலை செடி வைத்திருப்போம். ஆனால் கருவேப்பிலை செடி மட்டும் விரைவில் வளரவே வளராது.. செடி வைத்து கொஞ்ச நாள் வரைக்கும் வளர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிறகு அதன் வளர்ச்சியே இருக்காது. இந்நேரத்தில் தான் நாம் கருவேப்பிலை செடி விரைவில் வளர்வதற்கு சிலவற்றை செய்ய வேண்டும். எனவே, கருவேப்பிலை செடி வேகமாக வளர்ந்து மரமாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Grow Curry Leaves Faster at Home in Tamil:

 how to grow kariveppila in tamil

கருவேப்பிலை செடியானது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். எனவே இது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வளராது. எனவே, முதலில்  கருவேப்பிலை செடி வெயில் காலத்தில் தான் நன்றாக வளரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை செடி வளர்ச்சி இல்லாமல் இருக்கும் நேரத்தில், அதன் வளர்ச்சியை அதிகரிக்க தேவையான அளவு கரிம உரம் அல்லது உரம் சேர்க்க வேண்டும். பிறகு இதற்கு போதுமான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு சூரிய ஒளி படும் இடங்களில் வைக்க வேண்டும்.

கருவேப்பிலை செடி வைத்து 10 மாதங்களுக்கு பிறகே அதன் இலைகளை பறிக்க வேண்டும். அதற்கு முன்பாக பறித்தால் அதன் வளர்ச்சி குறைந்து விடும்.

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

புதினா செடி 5 நாட்களில் துளிர் விடும், 20 நாட்களில் புதினா இலைகள் வந்து விடும்..

கருவேப்பிலை செடி  வளர முக்கியமானது சூரிய ஒளிதான். எனவே செடியை உங்கள் வீட்டு பால்கனி அல்லது நன்கு சூரிய ஒளி படும் இடங்களில் வைக்க வேண்டும்.

மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் செடியில் அதிக தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வடிகட்டி விட வேண்டும்.

மழைக்காலம் முடிந்த பிறகு, அதன் மண்ணை நன்கு உலரவிட்டு அதன் பிறகுதான் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கறிவேப்பிலை செடி வைக்கும்போது அதற்கு கரிம உரங்களை இட வேண்டும். அதன் பிறகு, வளர்ச்சியின் போது நைட்ரஜன் நிறைந்த உரங்களை இட வேண்டும். மேலும், மாட்டு எருது, ஆடு எருது, மட்கிய வேப்பம் தழைகள் போன்றவற்றை உரமாக  இட வேண்டும்.

மேற்கூறிய இம்முறைகளை பின்பற்றுவதன் மூலம் கருவேப்பிலை செடியை விரைவில் வளர வைக்கலாம்.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

காய்ந்த முல்லை செடியிலும் 7 நாட்களில் பூக்கள் பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்