சாமந்தி பூ செடி
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் அழகிற்காகவும் மற்றும் பூக்களை பறித்து வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு வைப்பதற்காகவும் வளர்த்து வருகின்றனர். ஆனால் நாம் வளர்த்து வரும் பூ செடிகள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்போது நிறைய பூக்கள் பூப்பதில்லை. பூச்செடி என்றால் பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அதனால் எப்படியாவது நம்முடைய வீட்டில் உள்ள பூச்செடியில் நிறைய பூக்கள் பூத்து குலுங்க வேண்டும் என்று நிறைய ட்ரை செய்து இருப்பார்கள். ஆனால் அது அனைத்தும் வெற்றியை தந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் இன்று சாமந்தி பூ செடி நிறைய பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!
How to Grow Marigold Plant Faster:
சாமந்தி பூ செடியில் நிறைய பூக்கள் பூப்பதற்கு பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகமாக தேவைப்படும். அந்த அனைத்து சத்துக்களையும் இயற்கையான முறையில் நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயார் செய்யலாம்.
செடிக்கு தேவையான பாஸ்பரஸ்:
இரண்டு வாரத்திற்கு 1 முறை உங்கள் வீட்டில் இருக்கும் சாம்பலை தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது தெளிக்கும் போது சாமந்தி பூ செடிக்கு தேவையான பாஸ்பரஸ் கிடைத்து விடும். அதுபோல நீங்கள் சாம்பல் தண்ணீர் தெளிக்கும் போது தண்ணீரும் விட வேண்டும். இது மாதிரி செய்யும் போது விரைவில் பூக்கள் நிறைய பூக்க ஆரம்ப மாகிவிடும்.
சாமந்தி பூச்செடிக்கு தேவையான பொட்டாசியம்:
அடுத்து வாழைப்பழம் தோலினை எடுத்துக்கொண்டு தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து அந்த வாழைப்பழம் தண்ணீரை செடிகளின் மீது படுமாறு தெளித்து விடுங்கள்.
இதனை செய்யும் போது பூச்செடிக்கு தேவையான பொட்டாசியம் சத்து மற்றும் மெக்னீசியம் சத்தும் கிடைத்து செடியில் பூக்கள் சரியாக பூக்க மற்றும் பூக்கள் கருகி போகாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும். இதனை நீங்கள் வாரம் 1 முறை பயன்படுத்த வேண்டும்.
பூக்கள் நிறைய பூக்க மெக்னீசியம் சத்து:
பப்பாளி தோலில் நிறைய மெக்னீசியம் சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி பழம் தோல் மற்றும் விதையினை எடுத்துக்கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்து இருக்கும் உரத்திற்கு 2 மடங்கு அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து செடிகளின் மீது வாரம் 1 முறை தெளித்து விடுங்கள்.
இந்த மூன்றினையும் முறைப்படி வரிசையாக செய்யும் போது சாமந்தி பூ நிறைய பூப்பதற்கு உதவியாக இருக்கும்.
சாமந்தி பூ செடி வளர்ப்பு:
இப்போது கடலை புண்ணாக்கு 3 மற்றும் கற்றாழை சிறிதளவு இரண்டினையும் தனித்தனியாக முதல் நாள் இரவில் ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துள்ள கடலை புண்ணாக்கு தண்ணீரை எடுத்து வடிகட்டி ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள கற்றாழை தண்ணீர் 1 பெரிய கப் அளவிற்கு ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது சாமந்தி பூ செடி கரைசல் தயாராகிவிட்டது.
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலை வாரம் 1 முறை ஊற்றினால் போதும் செடியில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு செடி நிறைய பூக்கள் பூத்து குலுங்கும்.
இதையும் படியுங்கள்⇒ பூக்காத ரோஜா செடியில் பூ பூப்பதற்கு அஞ்சறை பெட்டியில் உள்ள 2 பொருட்கள் போதும்..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |