வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி..?

Advertisement

How To Grow Mint At Home in Tamil

புதினா ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். இது கறிவேப்பிலை, கொத்தமல்லியை போலவே சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. புதினாவை நாம் காய்கறி கடைகளில் இருந்து அதிகமாக வாங்கி வந்து அதனை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்துவோம். ஆனால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதால் புதினாவின் சத்துக்கள் குறைந்து விடும். எனவே இதனை வீட்டிலேயே வளர்த்தால் தேவைப்படும்போது பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். எனவே அனைவருக்கும் பயனுள்ள வகையில் புதினா செடியை வீட்டிலேயே எப்படி வளர்ப்பது என்பதை தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். உங்கள் வீட்டில் நீங்கள் புதினா செடியை வளர்க்க விரும்பினால் இப்பதிவை படித்து பயனடையுங்கள்.

Pudina Chedi Valarpathu Eppadi:

Pudina Chedi Valarpathu Eppadi

தேவையான இடம்:

புதினா செடியை வளர்ப்பதற்கு பெரிய அளவில் எந்த இடமும் தேவையில்லை. வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தாலே போதும். அதுமட்டுமில்லாமல் புதினா செடியை வீட்டு ஜன்னலில் வைத்தும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி செடி வீட்டிலையே வளர்க்கலாம்..

புதினா பயிரிடும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் நல்ல நிலையில் உள்ள மற்றும் தடிமனாக உள்ள குறைந்தபட்சம் இரண்டு கிளைகளை கொண்டிருக்கும் புதினா தண்டை எடுத்து கொள்ளவும். அத்தண்டில் மேலே உள்ள இரண்டு அல்லது மூன்று இலைகளை மட்டும் விட்டு விட்டு மற்ற இலைகளை எல்லாம் நீக்கி விட வேண்டும்.

ஸ்டேப்- 2

இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இதில் நாம் எடுத்து வைத்துள்ள புதினா தண்டை வைத்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டம்ளரில் உள்ள தண்ணீரை மாற்றிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டிற்குள் 5 நாட்கள் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

ஐந்து நாட்களுக்கு பிறகு புதினா தண்டு வேர்விட ஆரம்பித்து இருக்கும். இந்நிலையில் இத்தண்டை எடுத்து மண்ணில் நடவேண்டும்.

ஸ்டேப்- 4

புதினா நன்கு படர்ந்து வளரக்கூடிய செடி ஆகும். எனவே இதனை பெரிய அகலமான மண் தொட்டிகளிலோ அல்லது குரோ பேக்குகளிலோ நடவேண்டும்.

ஈஸியா இனி உங்கள் வீட்டிலையே இஞ்சிச்செடி வளர்க்கலாம்!

மண் கலவை செய்வது எப்படி.?

தேங்காய் நார் கழிவுகள் 30%, மண்புழு உரம் 30%, செம்மண் 40%, மாட்டு எருது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை புதினா நடும் தொட்டிலோ அல்லது குரோ பேக்குகளிலோ நிரப்பி கொள்ளுங்கள். பிறகு இதில் கையால் சிறிதளவு குழிபறித்து புதினா தண்டை நடவேண்டும்.

வைக்கும் இடம்:

புதினா செடியை அதிகமாக வெயில் படும் இடங்களிலோ அல்லது சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலோ வைக்கக்கூடாது. அதாவது மிதமான சூரிய ஒளியில் புதினா செடியை வைக்க வேண்டும்.

அறுவடை காலம்:

புதினா செடி 10 நாட்களில் நன்றாக வளர்ந்து அறுவடை செய்வதற்கு ஏற்றாற்போல் இருக்கும். இந்நிலையில் நீங்கள் புதினா செடியின் மேற்பகுதியில் இருக்கும் இலைகளை பறித்து பயன்படுத்தலாம்.

வீட்டில் விதையில் இருந்து தாமரை செடி வளர்க்கலாம் வாங்க

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement