How to Growth Rose Plant Faster in Tamil
பொதுவாக நாம் பல வகையான மலர்களை பார்த்து இருப்போம். அப்படி பார்க்கையில் பெரும்பாலான மலர்கள் எப்போதும் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் ரோஜா பூக்கள் மட்டும் வெள்ளை, ரோஸ், சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என இத்தகைய நிறங்களில் எல்லாம் கிடைக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மற்ற பூக்களை விட ரோஜா பூவின் தனித்துவமாக இதுவாக கூட இருக்கலாம். இதனால் தான் என்னவோ மக்கள் இதனை அதிகமாக விரும்பி ஒரு செடியாகவோ, தோட்டமாகவோ அமைத்து வருகிறார்கள். ஆனால் ரோஜா செடிக்கு வைத்து இருக்கும் அனைவருக்கும் எண்ணற்ற மலர்கள் கிடைக்குமா..? என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆகையால் இன்று ரோஜா செடி வேகமாக தளிர் விட்டு நிறைய பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடி தளிர் விட்டு பூக்கள் பூக்க டிப்ஸ்:
முதலில் நீங்கள் ரோஜா செடியினை கடையில் வாங்கும் போது அதனை சரியான முறையில் பார்த்து நன்றாக செழிப்பாக இருக்கும் செடியாக பார்த்து வாங்க வேண்டும். அதன் பிறகு ரோஜா செடியினை நடவு செய்வதற்கு மண்புழு, கோகோபீட் மற்றும் மாட்டு சாணம் என இவற்றை எல்லாம் கலந்த மண் கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு பூத்தொட்டி அல்லது சாதாரணமான தரையில் மண் கலவையை சமன் செய்து அதன் மேலே ரோஜா செடியை நடவு செய்ய வேண்டும். பின்பு ரோஜா செடி வாடாமல் இருப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் விட வேண்டும்.
வெள்ளை உளுந்து- 1 கைப்பிடி அளவு
நீங்கள் எடுத்துவைத்துள்ள வெள்ளை உளுந்தை முதலில் மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக செய்து வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு செடிக்கு 2 ஸ்பூன் என்ற விகிதம் அடிப்படையில் கொடுத்து அதற்கு தண்ணீர் ஊற்றி வாருங்கள்.
மேலும் மாட்டுச்சாணத்தை ஒரு வாளியில் உள்ள தண்ணீரில் நன்றாக ஊறவைத்து அப்படியே 2 நாட்கள் வரை விட்டு விடுங்கள். 2 நாட்கள் கழித்து அந்த மாட்டுச்சாணம் தண்ணீரையும் ரோஜா செடிக்கு கொடுத்து வாருங்கள்.
இந்த இரண்டையும் செய்வதன் மூலம் செடிக்கு தேவையான சத்து கிடைத்து ரோஜா செடி நன்றாக செழிப்பாகவும், வேகமாகவும் வளர்ந்து தளிர் விட்டு பூக்கள் நிறைய பூக்க ஆரம்பித்து விடும்.
வேகமாக ரோஜா செடி துளிர் விட்டு மலர்கள் பூத்து குலுங்க 1 ஸ்பூன் மஞ்சள் போதுமே
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |