பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..! Jackfruit benefits in tamil..!

jackfruit benefits

பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..! Jackfruit benefits in tamil..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..!

இன்றைய பொதுநலம் பதிவில் ஒரு முக்கியமான பதிவை தெரிந்து கொள்ள போகிறோம். அது  என்னவென்றால் பலாப்பழம் பயிரிடும் முறையும்(jackfruit cultivation in tamil) அதன் பயன்களை பற்றி இன்றைக்கு முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க…!

newநெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..! Paddy cultivation in tamil..!

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / jackfruit cultivation in tamil step 1:

பலாப்பழம் பயிரிடும் முறையை ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம். பலாப்பழம் சாகுபடி முறை வண்டல் செம்மண்ணில் சிறப்பாக விளையும் . ஆனால் நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நிலத்தை நன்றாக உழுது பின்பு 1 மிட்டர் அகலமும் , 1 மிட்டர் ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு  குழிகளிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75% தொழுஉரம் , 15% மண்புழு, 5% செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றறைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணிர் ஊற்றி ஆற விடவேண்டும்.

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / Jackfruit benefits in tamil step 2:

விதை மூலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய(jackfruit cultivation) வேண்டும். பிறகு ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணிர் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் கொடுத்தால் போதுமானது. மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை.

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / jackfruit cultivation in tamil step 3:

மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும்.

வருடா வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் 50 கிலோ அளவு தொழு உரமும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 2 கிலோ அளவும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

newமல்லிகை பூ சாகுபடி முறைகள்..!Malligai Poo Valarpu in Tamil..!

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / Jackfruit benefits in tamil step 4:

உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் போன்ற மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து பயிரிட வேண்டும்.

செடிகள் நன்றாக வளரும் வரை களைகள் இல்லாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு கிளைகளை வெட்டி வெட்டி பராமரிக்க வேண்டும்.

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / jackfruit cultivation in tamil step 5:

ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் நல்ல தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு கூடுதலாக உள்ள பிஞ்சுகளை அகற்றிவிட வேண்டும்.

விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காய்ப்புக்கு வரும். ஆனால் ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்க தொடங்கும்.

பலாப்பழம் பயிரிடுவது எப்படி / Jackfruit benefits in tamil step 6:

காயில் உள்ள முள்ளை வெட்டி பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த காய் அறுவடைக்கு தயாரான காய், பால் போன்ற திரவம் வந்தால் அந்த காயை பறிக்க கூடாது.

காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம்.

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பழங்களை பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை பயிரிடலாம்.

பலாப்பழத்தின் பயன்கள் / jackfruit benefits in tamil:

பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகும்.

பலாக்கொட்டையை பெரும்பாலானோர் சமையல் உணவிற்கு பயன்படுத்துவார்கள். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக கூட உண்ணலாம்.

கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் அதிகமாய் உள்ளது. புற்றுநோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.

பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு மிக விரைவில் ஆறிவிடும்.

 பலாப்பிஞ்சினை சமைத்து உண்டால் பித்தமும், நீர் வேட்கையும் நீங்கும்.

பலா இலையை காயவைத்து அதனை இடித்து பொடியாக்கி, தேனில் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும்.

பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.

newதேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்!!!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்