வளராமல் இருக்கும் செடிகள் தாறுமாறாக வளர இந்த கரைசல் மட்டும் போதும்..!

Sedigal Nangu Valara Karaisal

Sedigal Nangu Valara Karaisal

இன்றைய பதிவில் செடிகள் நன்கு வளர என்ன கரைசல் தெளிக்கலாம் என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். செடிகள் வளர்ப்பதற்கு அனைவருக்குமே பிடிக்கும். வீட்டை சுற்றி அழகழகான செடிகள் இருக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதனால் கடைகளில் இருந்து காசு கொடுத்து அழகழகான செடிகளை வாங்கி வந்து வளர்ப்பார்கள். ஆனால் அப்படி வளர்க்கும் போது ஒரு சில வீடுகளில் மட்டுமே செடிகள் நன்கு வளரும். ஒரு சில வீடுகளில் செடிகள் வளராமல் அப்படியே இருக்கும். செடிகள் வளரவே இல்லை என்று புலம்புபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் செழித்து வளர வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை..!

செடிகள் நன்கு வளர கரைசல்:

செடிகள் நன்கு வளர கரைசல்

இந்த காலகட்டத்தில் பலரும் வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வீட்டு மாடியில் விவசாயமே செய்து வருகிறார்கள்.

பொதுவாக செடிகள் நிலத்தில் வளரும் போது அதற்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து போன்றவற்றை நிலத்தில் இருந்தே எடுத்து கொள்ளும். ஆனால் நாம் மாடி தோட்டத்தில் செடிகளை தொட்டிகளில் வளர்க்கும் போது அதற்கான சத்துக்கள் கிடைக்காமல் போகின்றது.

அதனால் செடிகளை பூச்சிகள் அரித்து, செடிகள் வளராமலும், பூக்கள் மற்றும் காய்கள் காய்க்காமலும் போகின்றது. அதனால் செடிகள் நன்கு வளர்வதற்கு இந்த கரைசலை மட்டும் ஊற்றுங்கள்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

கரைசல் தயாரிக்கும் முறை: 

 ஒரு பெரிய வாளியில் 5 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 கிலோ அளவிற்கு கடலை புண்ணாக்கு போட்டு கொள்ளவும். பின் அதில் 2 கைப்பிடி அளவிற்கு வேப்பம் புண்ணாக்கு சேர்த்து, பின் அந்த வாளியை ஒரு துணியை கொண்டு மூடி 1 நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.  

பின் மறுநாள் அந்த கரைசலில் தண்ணீர் ஊற்றி ஒரு குச்சியை வைத்து கலந்துவிட வேண்டும். இதுபோல 7 நாட்களும் துணியால் மூடி வைத்து மறுநாள் காலையில் கலந்து விட வேண்டும். இந்த கரைசலை வெயிலில் வைக்க கூடாது.

7 நாட்களுக்கு பிறகு இந்த கரைசல் கரைந்து தண்ணீர் போல வந்துவிடும். பின் இந்த கரைசலை ஒரு துணியால் வடிகட்டி கொள்ள வேண்டும். இப்போது இந்த கரைசலை அனைத்து செடிகளுக்கும் ஊற்றலாம்.

இந்த கரைசலை ஊற்றுவதால் செடிகள் நன்கு செழிப்பாக வளரும். காய்கறி செடிகளில் ஊற்றுவதால் பூக்கள் அதிகமாக பூத்து காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பிக்கும். இந்த கரைசலை தயார் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளை செழிப்பாக வளர செய்யுங்கள்..!

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்