சொட்டு நீர் பாசனம் அரசு மானியம்..! Sottu Neer Pasanam Subsidy..!
Sottu Neer Pasanam Subsidy:- தற்போது உள்ள சூழ்நிலையில் வளரும் பயிர்களுக்கு தண்ணீர் விடுதல் என்பது மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் இந்த நிலை ஏற்படுகிறது. விவசாய்களின் இந்த பிரச்சனைக்கு சொட்டு நீர் பாசனம் ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது.
எனவே தமிழக அரசு சிறு குறு விவசாய்களுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க உதவுகிறது. எனவே இந்த பதிவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது.
இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், எப்படி பெறலாம், இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன போன்ற தகவல்கள் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..! |
Sottu Neer Pasanam Maniyam..!
விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் நீர் பாசனம் செய்வது என்பது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். விவசாயத்தற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள்.
மேலும் அதிகமாக நீரைப் பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்:-
சிறு குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுவதையும் 100% மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும். இதர விவசாய்கள் 75% மாநிலத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது.
அதாவது சிறு விவசாயிகளிடம் நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் அனைத்து பரப்பு நிலம் முழுவதிற்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம்.
அதேபோல் குறு விவசாயிகளிடம் நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர் வரைக்கும். புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் அனைத்து பரப்பு நிலம் முழுவதிற்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டருடன் கூடிய கிணறோ, ஆள்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:-
விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க கம்ப்யூட்டர் சிட்டா (computer chitta), அடங்கல், நில வரைபடம், ரேஷன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறுகுறு விவசாய்கள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார்கள். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
பிறகு இந்த விண்ணப்பத்தை மாவட்ட நுண்நீர் பாசன தொழிலுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும், பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதன் பிறகு விவசாயின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
சொட்டுநீர் பாசனம் அமைத்தல் / Sottu Neer Pasanam Subsidy:-
விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்கால் எடுக்க வேண்டும்.
அதன் பிறகு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசனம் கருவிகளை அமைக்கும்.
நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து, அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயின் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.
சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்..! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |