கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு | Mayiladuthurai Velaivaippu

Mayiladuthurai Velaivaippu

மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு | Mayiladuthurai Velaivaippu

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் பணிபுரிய தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கிராம உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் (Offline) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 19.01.2022 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட வருவாய் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள mayiladuthurai.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
பணிகள் கிராம உதவியாளர் 
பணியிடம் மயிலாடுதுறை
காலியிடம் 31
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
அதிகாரபூர்வ இணையதளம்mayiladuthurai.nic.in

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் காலியிடம் 
கிராம உதவியாளர் மயிலாடுதுறை வட்டம் (16)
குத்தாலம் வட்டம் (15)
மொத்த காலியிடம் 31

கல்வி தகுதி:

 • 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
 • தமிழில் பிழை இல்லாமல் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2021 அன்றைய தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • தபால் (Offline) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
 • அஞ்சல் முகவரியை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. mayiladuthurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அதில் Recruitment for the post of Village Assistant in Mayiladuthurai Taluk & Recruitment for the post of Village Assistant in Kuthalam Taluk என்ற அறிவிப்பு விளம்பரங்களை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATIONNOTICE 1 | NOTICE 2

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மயிலாடுதுறை மாவட்டம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News Tamil