மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Pudukkottai District Recruitment 2021

pudukottai district recruitment

Outdated Vacancy 

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Pudukkottai District Recruitment 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு பிரிவில் பணிபுரிந்திட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கணினி உதவியாளர் பணியை தற்காலிகமாக பணிபுரிந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 13 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 16.11.2021 அன்று அல்லது அதற்கு முன்  விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள pudukkottai.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டம் சத்துணவு பிரிவு 
விளம்பர எண் செ.வெ.எண்: 625
பணிகள் கணினி உதவியாளர்
பணியிடம் புதுக்கோட்டை 
காலியிடம் 13
சம்பளம் Rs.12,000/- (தொகுப்பூதியம்)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 25.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2021
அதிகாரபூர்வ இணையதளம் pudukkottai.nic.in

கல்வி தகுதி:

 • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கணினியில் M.S.Office முன் அனுபவம் மற்றும் Typing (Tamil/ English) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டம் அறிவித்துள்ள தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

 • மாவட்ட ஆட்சியர், சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை.

புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. pudukkottai.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் Block level Computer Assistant post in Noon Meal section என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தேவையான சான்றிதழ்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை  சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுக்கோட்டை மாவட்டம்  அறிவித்துள்ள  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy

புதுக்கோட்டை மாவட்டம் நீதித்துறை வேலைவாய்ப்பு 2021 | Pudukkottai District Recruitment 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) பணிக்கு தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு தபால் (Registered post) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 18.10.2021 அன்று அல்லது அதற்கு முன்  விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நீதித்துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள districts.ecourts.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் நீதித்துறை (Department of Justice)
பணிகள் சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (Steno Typist)
பணியிடம் புதுக்கோட்டை 
காலியிடம் 10
சம்பளம் (Rs.20,600 – 65,500/-) (Level 10)
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் districts.ecourts.gov.in

கல்வி தகுதி:

 • பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது மேல்நிலை கல்வி அல்லது Degree ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று Typing Tamil (Higher Or lower) மற்றும் English (Higher or lower) மற்றும் Basic Computer Knowledge தெரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • 01.09.2021 அன்றைய தேதியின்படி விண்ணப்பத்தாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது வரை இருக்க வேண்டும்.
 • அதிகபட்சம் OC விண்ணப்பதாரருக்கு 32 வயதும், B.C. and M.B.C விண்ணப்பதாரருக்கு 34 வயதும், SC/ST விண்ணப்பதாரருக்கு 37 வயதும் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

 • பதிவு தபால் (Registered post) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 • தபால் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்டம் – 622001

புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. districts.ecourts.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Notifiation – Recruitment for Steno Typists என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுக்கோட்டை மாவட்டம் நீதித்துறை அறிவித்துள்ள  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil