Arudam Meaning in Tamil
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே தன்னுடைய அறிவை நாளுக்கு நாள் வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. இப்படி நினைத்தால் மட்டும் போதாது அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து சொற்கள் மற்றும் பொருள் அனைத்திற்கும் அதற்கு பெயர்கள் மற்றும் அதற்கான அர்த்தம் என்று இருக்கும்.
ஆனால் நமக்கு தெரிந்த அர்த்தங்களை கொண்டு பேசி கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமானது. நம் பதிவில் தினந்தோறும் பல வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆருடம் என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
ஆருடம் என்றால் என்ன.?
நீங்கள் ஏதாவது சுப காரியம் செய்ய போகிறீர்கள் என்றால் அந்த செயலானது சரியாக வருமா, நல்லபடியா இருக்குமா இதனை தொடங்கலாமா என்று ஜோதிடரிடம் கேட்போம். இதற்கு எந்த குறிப்புகளும் இல்லாமல் அன்றைய கோள்களின் நிலையை வைத்து கூறுவது தான் ஆருடம். இந்த ஆரூடத்தில் பல வகைகள் இருக்கிறது, அதனை பற்றி காண்போம்.
- பிரசன்ன ஆருடம்
- திசை ஆருடம்
- பட்சி ஆருடம்
- தெய்வ ஆருடம்
- தாம்பூல ஆருடம்
- சோழி ஆருடம்
- ஏடு வழி ஆருடம்
இந்த ஆரூட வகைகளில் ஆருட ஜோதிடம் பிரபலமானது. அதாவது நடக்க போவதை கணித முறையில் முன்கூட்டியே அறிவிப்பது தான் ஆருடம்.
இந்த ஆருட முறையில் 64 கட்டங்கள் கொண்ட யந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த யந்திரத்தினை பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. சூரிய ஒளி இல்லாத நேரத்தில் ஆருடம் பார்க்க கூடாது. இந்த யந்திரத்தில் உள்ள கட்டங்கள் 8-க்கு 8 அளவிலான சதுர வடிவில் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த ஆருடமானது எளிமையானதாக இருக்கும், இதனை வைத்து மற்றவர்களுக்கு பலன்களை கூறலாம்.
ஆருடம் என்பதற்கான அர்த்தம்:
நீங்கள் நினைத்த காரியமானது சரியாக வருமா அல்லது இதனை செய்யலாமா என்பதை கணித்து கூறுவது தான் ஆருடம்.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..! |
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |