புருவ முடி அடர்த்தியாக வளர
உங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டுமில்லை புருவமும் தான். அத்தகைய புருவம் சிறியதாக இருந்தால் நல்லா இருக்குமா..! நல்லா இருக்காது.! புருவம் முடி அடர்த்தியாக வளர பார்லருக்கு செல்வீர்கள். இல்லையென்றால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவீர்கள். இதனால் முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செயற்கை முறையில் புருவத்தை அழகுபடுத்தாமல் இயற்கை முறையில் வீட்டில் இருந்தபடியே புருவத்தை அழகாக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Eyebrow Hair Growth Oil in Tamil:
வெந்தயம்:
வெந்தயம் 1/2 தேக்கரண்டி எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து புருவ முடியில் தடவி கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.
வெந்தயத்தில் உள்ள நிக்கோட்டினிக் ஆசிட், புரோட்டீன் இருப்பதால் புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் விளைவுகள்..!
கற்றாழை:
கற்றாழையை சீவி உள் பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து புருவ முடியில் தடவி கொள்ளவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு புருவ முடியில் அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து கழுவி கொள்ள வேண்டும்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலை லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். பின் இரவு தூங்குவதற்கு முன்பு ஆலிவ் ஆயிலை புருவத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து முகத்தை கழுவி கொள்ளவும்.
முட்டையின் மஞ்சள் கரு:
முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் புருவ முடியில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து கழுவி கொள்ளலாம். மஞ்சள் கருவில் ஏராளாமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் சீக்கிரமாக முடி வளருவதற்கு உதவுகிறது.
வெங்காய சாறு:
சின்ன வெங்காயம் அரைத்து சாறாக எடுத்து கொள்ளவும். இந்த வெங்காய சாற்றை புருவ முடியில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவி கொள்ளலாம்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை வாரத்தில் மூன்று நாட்கள் என்று அப்ளை செய்து வரவும். விரைவில் புருவ முடி அடர்த்தியாக வளரும்.
இதையும் படியுங்கள் ⇒ வேரிலிருந்தே வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |