Grow Hair Longer Natural Oil At Home
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம்மில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முகப்பரு, கரும்புள்ளிகள், முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இந்த பிரச்சனை வருவது இயற்கை தான். ஆண்கள் அதை அவ்வளவு பெரியதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை.
முகத்தில் சிறிய பரு வந்தாலும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். அதுபோல அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடும். அதனால் இன்றைய பதிவில் முடியை நீளமாக வளர செய்யும் இயற்கையான எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Grow Hair Longer Natural Oil At Home in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 100 ml
- வெந்தயம் – 1/2 கப்
- கருஞ்சீரகம் – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 10
- செம்பருத்தி இலை – 10
- செம்பருத்தி பூ – 6
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
கடாயை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 100 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்ற வேண்டும்.
பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போடவேண்டும். இரண்டையும் நன்றாக கொதிக்க விடவேண்டும்.
முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறதா அப்போ வெங்காயம் மட்டும் போதும் உதிர்ந்த முடி அனைத்தும் வளர்ந்துவிடும் |
பொருட்களை சேர்க்கவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் கருவேப்பிலை, செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூ இவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் நாம் சேர்த்த பொருட்களின் நிறம் மாறியதும் எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
அவ்வளவு தான் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை நீங்கள் எப்பொழுதும் தடவுவது போல தடவ வேண்டும். இதுபோல தடவி வந்தால் 7 நாட்களில் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
உங்க முடி வெறித்தனமா வளர இந்த ஒரு பொடி மட்டும் போதும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |