சுக்கிரன் இந்த ராசிக்காரர்களை பணக்காரராக மாற்ற போகிறார்..! அந்த பணக்காரர் நீங்களானு பாருங்க..!

சுக்கிரனின் பெயர்ச்சி எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் 

இன்றைய சூழலிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே  இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ராசிக்கு 3 நட்சத்திரங்கள் உள்ளன. அதுபோல கிரகங்களின் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கிரகங்கள் ஓரே ராசியில் இருப்பதில்லை.

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அப்படி கிரகங்கள் இடம்பெயரும் போது சில ராசிகளுக்கு நன்மையை செய்கிறது. அதுபோல சில ராசிக்கு கஷ்டத்தை கொடுக்கிறது. அந்த வகையில் சுக்கிர பகவான் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடையப்போகிறார். மேலும் ஜூலை 7 ஆம் தேதி வரை கடக ராசியில் தான் இருப்பார். இதனால் சில ராசிகளுக்கு பணம் மழையாக பொழியப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!

கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டப்போகிறது.. திறக்க தயாராக இருங்க

கடக ராசி:

கடக ராசி

சுக்கிர பகவான் கடக ராசியிலேயே பெயர்ச்சி அடைவதால், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கப்போகிறார். இதுவரை எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நேரம் இது. இந்த நேரத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி மகிழ்வீர்கள். சமூதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த காலம் உங்களுக்கு பொன்னான காலமாக இருக்க போகிறது.

மீன ராசி:

மீன ராசி

கடக ராசியில் சுக்கிரனின் நுழைவதால் மீன ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. உங்கள் எதிர்கால கனவுகள் நிறைவேறும் நேரம் இது. நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்க நினைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

சனி ஜெயந்தி மகிமையால் இந்த ராசிக்கு அமோகமான பலன்கள்..  எப்பா உங்கள் ராசி இருக்கா பாருங்கள்

விருச்சிக ராசி:

விருச்சிகம் ராசி

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல வகைகளில் நன்மைகளை செய்யப்போகிறது. நற்பலன்கள் உங்களை தேடி வரப்போகிறது.  பணிகளில் உங்கள் ஆர்வம் கூடும். புதிய நண்பர்கள் கிடைக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் பணம் புரளப்போகிறது. அதனால் எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

மேஷ ராசி:

மேஷ ராசி

சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை செய்யப்போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். அதேபோல நல்ல லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் பணிகளில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் நேரம் இது. வருமானம் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

புதன் வக்ர நிவர்த்தியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்