கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டப்போகிறது..! திறக்க தயாராக இருங்க..!

Gajakesari Yogam in Tamil

Gajakesari Yogam in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய நவீன உலகிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிமுகமாகவே இருக்கிறார்கள். இந்து சமயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி இருக்கும். அதுபோல கிரகங்களில் மாற்றம் ஏற்படும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அப்படி இடம் பெயரும் போது சில ராசிகளுக்கு நன்மையை செய்யும். சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும்.

அதுபோல மே 17 ஆம் தேதி, குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கபோகிறது. அதாவது மே 17 அன்று இரவு 7.39 மணிக்கு சந்திரன் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மேலும் குரு பகவான் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். சந்திரன் மேஷ ராசியில் குரு பகவானுடன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது..! இப்படி அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

சனி ஜெயந்தி மகிமையால் இந்த ராசிக்கு அமோகமான பலன்கள்..  எப்பா உங்கள் ராசி இருக்கா பாருங்கள்

கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசி எது..?

துலாம் ராசி: 

துலாம் ராசி

குருவும் சந்திரனும் இணைவதால் உருவாகும் கஜகேசரி யோகம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப்போகிறது. இந்த நேரத்தில் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக காணப்படும். இந்த காலத்தில் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக பணவரவு உங்களை தேடி வரும்.

அலர்ட்டாக இருங்கள்.. யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..

மேஷ ராசி: 

மேஷ ராசி

கஜகேசரி ராஜயோகம் உருவாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. கஜகேசரி யோகத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். இதுவரை நடக்காமல் இருந்த செயல்கள் இந்த நேரத்தில் நடந்து முடியும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான  வாய்ப்புகள் இருக்கிறது. பணவரவு அதிகமாக காணப்படும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. அதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை, பதவி, கௌரவம் எல்லாம் கிடைக்கும் நேரம் இது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காலம் உங்களுக்கு பொன்னான காலமாக இருக்கும்.

புதன் வக்ர நிவர்த்தியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்