1 வயது குழந்தைக்கான புரத உணவு..! 1 Year Baby Protein Foods..!

protein foods for baby

ஒரு வருட குழந்தைக்கு புரத சத்து நிறைந்த உணவுகள்..! Protein Rich Food For 1 Year Baby..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில்  ஒரு வயது குழந்தைக்கு என்னென்ன புரத சத்து நிறைந்த உணவு(protein foods for baby) முறைகளை கொடுக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தையின் உடலில் புரதச்சத்து அதிகமாகவே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடலில் புரத சத்து குறைந்து போனால் குழந்தையின் தோல் சிவந்து போய் காணப்படும். அதோடு குழந்தைக்கு கையில் உள்ள நகங்கள் உடைந்து போகுதல், முடி அதிகமாக உதிர்ந்து போதல், அடிக்கடி பசி போன்ற பிரச்சனை ஏற்படுவதை வைத்து குழந்தைக்கு புரத சத்து குறைவாக உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். சரி இப்போது குழந்தைக்கு என்னென்ன வகையான புரதம் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம்..!

new1 வயது குழந்தை உணவு வகைகள்..!

குழந்தைக்கு புரத சத்து அதிகமாக பால்:

பாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தாராளமாய் குடிக்கலாம். ஒரு கப் பாலில், 8 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. குழந்தைக்கு தேவையான அளவிற்கு புரத சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளதால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

பால் குடிக்காத குழந்தைகளுக்கு பாலில் ஏதும் சேர்த்து கூட பாலை கொடுக்கலாம். குழந்தைக்கு இது போன்று வேற பொருள்கள் சேர்க்காமல் கொடுத்தால் குழந்தைக்கு வளர்ச்சி கூடும்.

பழ வகைகள்:

புரதம் நிறைந்த கிவி பழம்:

புரத சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த கிவி பழத்தை கொடுக்கலாம். கிவி பழத்தை ஜூஸ் முறையில் குழந்தைக்கு கொடுக்கலாம். இந்த பழம் சாப்பிடுவதால் குழந்தைக்கு புரத சத்து அதிகரிக்க கூடும்.

குழந்தைக்கு கொடுக்கும் நாவற்பழம்:

புரத சத்து கூட நாவற்பழங்களை கொடுக்கலாம். இதன் சுவைகளை குழந்தைகள் விரும்பாவிட்டாலும் சாப்பிடும்போது ஃபெண்டசி உணர்ச்சியை கொடுக்கும். நாவற்பழத்தின் கலருக்கு ஏற்ற மாறி நமது நாக்கும் மாறுபடுவதால் குழந்தைகள் இதனை பெரிதும் விரும்புவார்கள்.

ஒரு வருட குழந்தைக்கு பலாப்பழம்:

பருவ காலங்களில் மட்டுமே இந்த பழம் எளிதாக கிடைக்கும். புரத சத்து நிறைந்துள்ள பலாப்பழத்தை குழந்தைக்கு அளவாக கொடுக்க வேண்டும். இது செரிமான  பிரச்சனையை ஏற்படுத்தும்.  குழந்தைக்கு பலாப்பழத்தில் சாப்பிடும் பகுதியை மட்டும் ஊட்ட வேண்டும்.

new11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

 

பருப்பு வகைகள்:

புரதம் அதிகமாக இருக்கும் முந்திரி:

புரத சத்து அதிகமா இருப்பதால் இதனை குழந்தைக்கு நேரிடையாகவோ அல்லது எதும் சேர்த்து கூட முந்திரியை கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொடுக்கும் பாதாம்:

பாதாமிலும் அதிகமாக புரத சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு இதை தாராளமாய் கொடுத்து பழகலாம்.

புரத சத்து நிறைந்த வேர்க்கடலை:

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது வேர்க்கடலை. இதனை அளவுக்கு அதிகமாக குழந்தைக்கு கொடுத்தால் செரிமான கோளாறு பிரச்சனைகள் வரும். குழந்தைகள் வேர்க்கடலையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். புரதம் நிறைந்துள்ளதால் குழந்தைக்கு இதை கொடுக்கலாம்.

புரதம் சத்து வாய்ந்த கீரைகள்:

கீரைகளில் பெரும்பாலும் உயிர் சத்து மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. அதோடு கீரைகளில் பசலை, கடுகு கீரை, போன்றவைகளில் புரதம் அதிகமாக உள்ளது. குழந்தைக்கு கீரைகளை கொடுக்கும் போது நன்றாக வேகவைத்து மசித்து ஊட்ட வேண்டும்.

அசைவ உணவு வகைகள்: 

குழந்தைகளுக்கு கொடுக்கும் கோழி கறி:

குழந்தைக்கு கோழியை குழம்பு முறையிலோ அல்லது எண்ணெயில் பொரித்தும் கொடுக்கலாம். இதனை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். குழந்தைக்கு கோழியில் இருக்கும் எலும்பு பகுதியை தவிர்த்து விட்டு எளிதாக உள்ள பகுதியை மட்டும் கொடுக்கலாம். மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு அனைத்தையும் தாராளமாய் கொடுத்து பழகி விடலாம்.

புரத சத்து அடங்கிய முட்டை:

குழந்தைக்கு முட்டையை வேக வைத்து தான் கொடுக்க வேண்டும். இதில் புரத சத்துக்கள் நிறையவே உள்ளது. சிலருக்கு முட்டையில் உள்ள மஞ்சள் கரு, சிலருக்கு வெள்ளை கரு பிடிக்காதனால் முட்டையில் தேன் அல்லது சர்க்கரை சேர்த்தும் கொடுக்கலாம். வாரத்தில் குழந்தைக்கு 2 முறை முட்டை கொடுக்க வேண்டும்.

புரத சத்து முழுமை பெற்ற மீன்:

புரதம் நிறைந்துள்ள மீன் வகைகளை குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தைக்கு மீன்களை கொடுக்கும் போது மீனில் உள்ள முள்களை பார்த்து சரியாக எடுத்து கொடுக்க வேண்டும். மீனை நன்கு வேகவைத்த பின்னர் குழந்தைக்கு கொடுக்கலாம்.

newபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil