ஆயுஷ்மான் பாரத் திட்டம்
மத்திய அரசு பொதுமக்களுக்கு பல வகையான பயனுள்ள திட்டங்களை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. அப்படி அரசு வழங்கி வரும் திட்டங்களில் ஒன்று தான் மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா காப்பிட்டு திட்டம். இத்திட்டத்தில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெற்று கொள்ளலாம். அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
காப்பீடு திட்டம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. தமிழக அரசு வழங்கப்படும் காப்பீடு திட்டத்தை போலவே மத்திய அரசு வழங்கும் ஆயுஷ் மான் பாரத் யோஜனா திட்டத்திலும் வருடத்திற்கு 5 லட்சம் காப்பீட்டு தொகை அளிக்கப்படுகிறது. ஓகே வாருங்கள் ஆயுஷ் மான் பாரத் யோஜனா காப்பிட்டு திட்டத்தினை பற்றிய சில விவரங்களையும், ஆன்லைனில் அப்ளை செய்யும் முறையை பற்றியும் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Ayushman Bharat Scheme in Tamil:
Ayushman Bharat Scheme என்பது, மத்திய அரசு வழங்கக்கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும். இதன் மூலம் 5 லட்ச ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். இத்திட்டத்தில் மொத்தம் 17000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துமனைகளிலும் ஆயுஷ் மான் பாரத் யோஜனா காப்பிட்டு திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை சேவைகளை பெறலாம்.
ஆயுஷ்மான் பாரத் கார்டில்னால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா..?
How to Apply Ayushman Card Online in Tamil:
முதலில், healthid.ndhm.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
கிளிக் செய்ததும் Create your ABHA number using Aadhaar மற்றும் Create your ABHA number using
Driving Licence என்ற இரண்டு ஆப்ஷன்கள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை கிளிக் செய்து அதற்கான விவரங்களை உள்ளிடவும்.
உதாரணமாக, நீங்கள் ஆதார் கார்டு மூலம் காப்பீடு திட்டம் பெறப்போகிறீர்கள் என்றால் Create your ABHA number using Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்ததும், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை டைப் செய்து உள்ளே நுழைந்ததும் உங்கள் பெயர், வருமானம் மற்றும் பான் கார்டு எண்ணுடன் உங்கள் எளிய தகவலை உள்ளிடவும்.
அடுத்து, உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். அந்த கார்டைப் பதிவிறக்கி கொள்ளுங்கள். இந்த கார்டின் மூலம் உங்களுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |