காய்ச்சலின் போது வாய் கசப்பாக இருக்க காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Reason For The Mouth To Be Bitter During Fever in Tamil

Reason For The Mouth To Be Bitter During Fever in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் சிறு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே ஒரு விஷயத்தை கவனித்திருப்போம். நமக்கு காய்ச்சல் ஏற்படும் போது வாய் கசப்பாக இருக்கும். அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு காரணம் என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் காய்ச்சலின் போது ஏன் வாய் கசப்பாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?

காய்ச்சல் ஏற்படும் போது வாய் கசப்பாக இருக்க காரணம் என்ன..? 

சுவையை அறிந்து சாப்பிடுவது என்பது இயற்கையாக நமக்கு கிடைத்த வரங்களில் ஓன்று. நாம் அறுசுவைகளையும் அறிந்து சாப்பிடுகிறோம். அந்தவகையில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என அறுசுவைகளையும் ரசித்து சாப்பிடுகிறோம்.

அப்படி நாம் ரசித்து ருசித்து சாப்பிடும் தருணங்களில் காய்ச்சல் வந்தால் வாய் கசப்பாக மாறிவிடும். காய்ச்சலின் போது நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அது கசப்பாக தான் இருக்கும். காய்ச்சல் அடிக்கும் போது தண்ணீர் குடித்தால் கூட கசப்பாக இருக்கும்.

ஏன் அப்படி வாய் கசப்பாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

காய்ச்சல் வந்தாலே நம் உடம்பில் கிருமிகள் வந்து விட்டது என்று அர்த்தம். நம் உடம்பில் இருக்கும் அந்த கிருமிகளை எதிர்த்து நோய்எதிர்ப்பு அமைப்பு போராடுகிறது.

 அந்த நோய்எதிர்ப்பு அமைப்பு போராடுவதற்கு பயன்படும் ஒரு அமிலம் தான் Cytokines. இந்த Cytokines என்ற புரோட்டீன் நம் உடம்பில் அதிகரிப்பதால் தான் காய்ச்சல் ஏற்படும் போது நம் வாய் கசப்பாக இருக்கிறது.  Cytokines என்ற அமிலம் தான் காய்ச்சல் ஏற்படும் போது நம் வாய் கசப்பாக இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது.  
Fingerprint எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இந்த Cytokines என்பது இரண்டு விதமான செயல்முறைகள் மூலமாக நம் வாயில் கசப்பு தன்மையை ஏற்படுத்துகிறது.

  1. Cytokines நம் நாக்கில் சுவையை உணர்வதற்கு காரணமாக இருக்கும் Taste Buds என்று சொல்ல கூடிய சுவை அரும்புகளில் ஏதும் பிரச்சனையை ஏற்படுத்தினால் மட்டுமே காய்ச்சல் அடிக்கும் போது நம் வாய் கசப்பாக இருக்கும்.
  2. நம் மூலையில் இருக்கும் செல்களில் குழப்பத்தை ஏற்படுத்தி, நம் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவும் வாய் கசப்பாக இருக்கும்.

இதுபோல காய்ச்சல் ஏற்படும் போது நம் வாய் கசப்பாக இருப்பதற்கு Cytokines தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகளில் சொல்லப்படுகிறது.

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting Information