Best Yoga For Headache in Tamil
அதிக வேலை செய்வதாலும் சரியான தூக்கம் இல்லாததாலும் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. பலபேர் தலைவலி நீங்க தைலம் தடவுவது, மாத்திரை போடுவது, இஞ்சி டீ குடிப்பது மற்றும் ஆவி புடிப்பது போன்ற பல முறைகளை கையாளுவார்கள். இம்முறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதனை தவிர்த்து தலைவலி நீங்க சூப்பரான தீர்வு ஒன்று உள்ளது. அது வேறொன்றும் இல்லை யோகா தான். யோகா பல விதமான நோய்களில் இருந்தது நம்மை பாதுகாக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான யோகாசனங்கள் உள்ளது. அந்த வகையில் தலைவலியை போக்கக்கூடிய யோகாசனங்கள் பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.
பாலாசனம்:
பாலாசனம் என்பது குழந்தை, கால்களை மடக்கி குப்புறப் படுத்திருப்பது போல் செய்யக்கூடிய யோகா ஆகும். இதனால் குழந்தை போஸ் என்று அழைக்கப்படுகிறது.
எனவே கால்களை மடக்கி குப்புறப்படுத்து கைகளை நேராக நீட்டி வைத்திருப்பதன் மூலம் முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதிகளில் உள்ள பதற்றம் நீங்கி மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி தலைவலி குறையும்.
கீழ் முதுகு வலி நீங்க இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்
உத்தனாசனம்:
உத்தனாசனம் என்பது நன்றாக நின்று தலைபகுதியை மட்டும் காலில் தொடுமாறு செய்யும் யோகாவாகும். இந்த யோகாசனத்தை செய்வதால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் தலைவலி நீங்குகிறது.
அதோமுக சவாசனம்:
இந்த ஆசனம் உடலை கீழ்நோக்கி வளைத்து செய்யக்கூடிய யோகாவாகும். இதனை செய்யும் போது உடலில் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. இதனால் உடல் பகுதியானது பதற்றமின்றி இருக்கும்.
சேது பந்தாசனம்:
தரையில் படுத்து கைகளை பின்புறத்தில் ஊன்றி உடலை மட்டும் பாலம் இருக்கும் வடிவத்தில் வைத்து செய்வது தான் சேது பந்தாசனம். இதனால், இது “பாலம் போஸ்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் நீங்குகிறது. எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி பிரச்சனைக்கு சேது பந்தாசனம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
பச்சிமோத்தாசனம்:
தரையில் அமர்ந்து கால்களை நீட்டி உடலை முன்னோக்கி வளைத்து செய்வது பச்சிமோத்தாசனம் ஆகும். இந்த ஆசனம் செய்வதால் முதுகுத்தண்டு நீட்சியடைந்து தலை மற்றும் கழுத்து பகுதிகளில் காணப்படும் பதற்றத்தை நீக்குகிறது. இதனால் தலைவலி விரைவில் குறையும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |