முதலீடு தேவை இல்லை உழைப்பே முதலீடு தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Fruit Peel Powder Making Business in Tamil

முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்து தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! Fruit Peel Powder Making Business in Tamil..!

வணக்கம் நண்பர்களே தினமும் ஒரு தொழில் யோசனையை பற்றி நமது பொதுநலம்.காமில் பதிவு செய்து வருகிறோம் அந்த வகையில் இன்றிய பதிவில் Fruit Peel Powder Making Business பற்றி தான் பார்க்க போகிறோம். இதன்முலம் எப்படி வருமானம் கிடைக்கும் என்று யோசிப்பீர்கள். இப்பொழுது பெண்கள் அவர்களது அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் இயற்கையான முறையில் சரும அழகை பராமரிக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஆகவே ஆரஞ்ச், எலுமிச்சை, பப்பாளி போன்ற பழங்களின் தேளை பயன்படுத்தி Fruit Peel Powder தயார் செய்து விற்பனை செய்யும்போது அதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Fruit Peel Powder எப்படி தயார் செய்வது?

Fruit Peel Powder தயாரிப்பது என்பது ஒன்று பெரிய விஷயம் இல்லைங்க. உங்கள் ஊரில் உள்ள பிரஸ் ஜூஸ் செய்யும் கடைக்கு நேரடியாக செல்லுங்கள். அவங்க ஆரஞ்ச், பப்பாளி, எலுமிச்சை பழங்களில் கண்டிப்பாக ஜூஸ் செய்து விற்பனை செய்வாங்க. அதன் தோலினை வீணாக குப்பையில் தான் தூக்கி எரிவாங்க. ஆகவே அந்த தோலினை அவர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.

பின் அந்த தோலினை தனித்தனியாக பிரித்து வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து கொள்ளுங்கள்.

நன்கு காய்ந்த பின் மிக்சியில் பவுடராக அரைத்துக்கொள்ளுங்கள். பின் சல்லடையில் சலித்துக்கொள்ளுங்கள்.

பின் 100 கிராம் அளவில் லேபிள் ஒட்டி சரியான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

சந்தைவாய்ப்பு:

பேக்கிங் செய்த Fruit Peel Powder-ஐ அழகு சாதனம் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில் விற்பனை செய்யலாம். அதாவது பியூட்டி பார்லர், பேஷன் ஸ்டோர் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

அதேமாதிரி நீங்கள் Fruit Peel Powder தயார் செய்து விற்பனை செய்கிறீர்கள் அன்று வாட்ஸ்அப், பேஸ் புக், டெலக்ராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யலாம்.

உங்கள் தெருவில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தலாம்.

இதன் மூலம் உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தினமும் 6 மணி முதல் 9 மணி வரை வேலை பார்த்தால் போதும், தினமும் Rs.1000/- வரை சம்பாதிக்கலாம்..!

வருமானம்:

சந்தைகளில் 100 கிராம் Fruit Peel Powder-ஐ 120 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றான். ஆகவே நீங்கள் 100 கிராம் Fruit Peel Powder-ஐ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பார்கள்.

உங்களை ஒரு நாளைக்கு குறைந்தது 20 பாக்கேட் விற்பனை செய்ய முடியும் என்றால் 2000 ரூபாய் தினமும் வருமானம் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு பத்து பாக்கேட் விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். அப்படி பார்த்தால் மாதத்திற்கு குறைந்தது 24000 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

ஆகவே பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை உங்கள் ஓய்வு நேரத்தில் செய்தீர்கள் என்றால் நிச்சயம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022