Vanakkam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நாம் பேசும் வார்த்தைகளாக இருந்தாலும் சரி, பயன்படுத்தும் பொருட்களாக இருந்தாலும் சரி அதற்கு ஓன்று மூன்று பெயர்கள் இருக்கும். ஆனால் அந்த பெயர்கள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான வேறு பெயர்கள் மற்றும் வேறு சொல் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் வணக்கம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வணக்கம் வேறு சொல்:
பொதுவாக வணக்கம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். வணக்கம் என்பது, தமிழ் பண்பாட்டில் இன்றியமையாத ஓர் நல்ல பழக்கமாக இருக்கிறது.
தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் அல்லது உடன்படுகின்றோம் என்று பொருள் தருகிறது. அதுபோல வலதுகை நாம் எனவும், இடதுகை நம் முன் அல்லது நம் மனதில் நிற்பவர்கள் என்றும் எண்ணி கை கூப்புவதே வணக்கம் ஆகும்.
நம் கைகளை உள்ளத்தின் முன் நிறுத்துவதால் உணர்வுபூர்வமாகவும், தலைதாழ்த்துவதால் பணிவுடன் வரவேற்கின்றோம் என்றும் பொருள் தருகிறது.
ஆகவே வணக்கம் என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு மரபாகும்.
அதுபோல பண்டைய காலத்திலிருந்தே கடவுளையும், மூத்தோரையும் வணங்கும் போது உடலை வளைத்து தொழுவது தொன்று தொட்டு பின்பற்றி வரும் நம் தமிழரின் மரபாகும். இதன் அடிப்படையிலேயே வளைதற் கருத்தில் இருந்து வணக்கக் கருத்துப் பிறந்தது.
நாம் இடுப்பை வளைத்து தலையைக் குனிந்து இரு கைகளையும் கூப்பி மரியாதையுடன் வணங்கும் செயலுக்கு ‘வணக்கம்’ என்று பொருள். “தங்களை வணங்குகிறேன்” என்ற பொருளில் உருவான தமிழ்ச்சொல்லே வணக்கம் என்பதாகும்.
வணக்கம் வேறு பெயர்கள்:
இந்த வணக்கம் என்ற சொல்லை வேறு பெயர்களால் கூட கூறலாம்.
- வணங்குதல்
- தொழுதல்
- அன்பொழுகல்
- போற்றுதல்
- வாழ்த்துதல்
- வரவேற்றல்
- நன்றி உரைத்தல்
- போற்றுதல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |