Grade Pay in Tamil | Grade Pay Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலக அறிந்து வருகிறோம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் Grade Pay என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. சமீபத்தில் Grade Pay என்பதை நாம் அனைவருமே அதிகமாகி கேள்வி பட்டிருப்போம். ஆனால், அதனை பற்றிய விவரங்கள் என்ன என்பது நமக்கு தெரியாது. ஆகையால், இப்பதிவின் மூலம் அதனை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Grade Pay என்பது அரசு பணியாளர்களின் சம்பளம் கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும். Grade Pay மட்டுமில்லாமல், பல சிஸ்டங்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் சம்பளம் கணக்கிடப்படுகிறது. ஆகையால், Grade Pay பற்றிய சில தகவல்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
What is Grade Pay in Tamil:
Grade Pay என்பது பதவி நிலை சம்பளம் அல்லது தர ஊதியம் ஆகும். 10 வருடத்திற்கு Pay Commission பண்ணுவார்கள். Pay Commission-யில் சென்ட்ரல் கவர்மெண்ட் மற்றும் ஸ்டேட் கவர்மெண்ட் பணியாளர்களுக்கு சம்பளம் ரிபிக்ஸ் பண்ணுவார்கள். அப்போது, அடிப்படை ஊதியம் மற்றும் அலோவன்சையும் ரிபிக்ஸ் பண்ணுவார்கள். இது இந்தியாவில் பணவீக்கம் மற்றும் அரசின் பொருளாதார நிலைமை பொருத்தும் அமையும். அரசு வேலைக்கு வரும் ஒருவர் ஆரம்ப நிலையில் எந்த விதமான பேசிக் பேயில் பணியமர்த்தப்படுகிறாரோ, அந்த தொகையில் இருந்து அவருக்கு வருடத்திற்கு ஒருமுறை 3% Increament கொடுப்பார்கள். உதாரணமாக, ஒருவர் 1,00,000 Basic Pay -யில் பணியமர்த்தப்படுகிறார் என்றால் அவருக்கு 1 வருடத்தில் 3% Increament என்ற வகையில் 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயினை சம்பளமாக பெறுவார். இவ்வாறு ஆரம்ப நிலை சம்பள தொகையினை பொறுத்து வருடத்திற்கு 3% Increament கிடைக்கும். ஆகவே, ஒரு வேலையில் அதிக வருடம் வேலைபார்ப்பவர்களின் சம்பளம் அதிகமாக இருக்கும். அதுவே, புதிதாக ஒருவர் அவரின் உயர் பதவிக்கு வந்தால் குறைவான சம்பளமே பெறுவார். இதனால் பல முரண்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த முரண்பாடை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் 2006 ஆம் கொண்டுவரப்பட்டது தான் grade pay.
2006 ஆம் கொண்டுவரப்பட்டது தான் Grade Pay சிஸ்டம் 6th Pay Commission -னில் வரும். ஒரு அரசு வேளையில் இருப்பவர்க்கு Basic pay என்பது முக்கியமில்லை. ஒருவர் என்ன Grade Pay -ல் இருக்கிறாரோ அதனை பொறுத்து தான் அவர்க்கு வழங்கப்படும் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பெரிய ஆபீசருக்கு அதிக Grade Pay-யும் சின்ன ஆபீஸருக்கு குறைவான Grade Pay-யும் இருக்கும். சின்ன ஆபீசரின் Basic Pay மற்றும் சம்பளம் அதிகமாக இருந்தாலும், பெரிய ஆபிஸருக்கு Grade Pay அதிகமாக இருக்கும். சென்ட்ரல் கவர்மென்டில் 4 விதமான பே பேண்ட் இருக்கிறது. அதாவது, அரசு வேலையில் உள்ளவர்களுக்கு Seventh Pay Commission Pay Matrix மூலம் சம்பள அளவு கணக்கிடப்படும். அதனை பற்றி பின்வருமாறு உள்ள படத்தில் விவரமாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு கிரேடு பேயில் இருப்பவர் ப்ரோமோஷன் ஆகிறார் என்றால் அவர் இருந்த கிரேடு பேயில் இருந்து அடுத்த கிரேடு பே கிடைக்கும். இவ்வாறு ஒரு அதிகாரி ப்ரோமோஷன் ஆகும்போது அடுத்த கிரேடு பே கிடைக்கும். இதன்படியே அரசு அதிகாரியின் சம்பள விகிதம் கணக்கிடப்படுகிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |