ராம ஜென்ம பூமி வரலாறு

Advertisement

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தின் அயோத்தியில் பிறந்தார், அந்த பகுதியே இராம ஜென்ம பூமி என்று இன்று வரை அழைக்கப்படுகின்றது. இராமாயணத்தில், சரயு ஆற்றின் கரையில் உள்ள கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக ராமர் பிறந்தார் என்று கூறப்படுகின்றது. இந்த ராம ஜென்ம பூமியானது முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் முக்கியமான நிகழ்வுகளில் இந்த அயோத்தியும் ஒன்று. ஏனென்றால் அயோத்தியில் பல பிரச்சனைகள் நடந்திருக்கின்றது.

தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் அங்கே இருக்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருந்தது. இந்த பதிவில் நீங்க முழுவதுமாக ராம ஜென்ம பூமி வரலாறு அதாவது History of ayodhya பற்றி தெளிவாக பார்ப்பீர்கள்.

அயோத்தி ராமர் கோவில் வரலாறு

வரலாற்றில், பிற்காலத்துல இந்திய மேல படையெடுத்த மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர் அயோத்தில் இருந்த பிரதான இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528-இல் தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்ற பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Babri Masjid

தொழில் துறை நடத்திய ஆராய்ச்சியில் பாப்ரி மசூதி இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தள்ளி ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரமா வராகம், ஆமை ஆகிய பொறிக்கப்பட்ட தூண்களும் சுடுமண் சிற்பங்களும் கிடைத்ததா தெரிய வந்தது. இது போல் பிரச்சனை வருங்காலத்தில் வரும் என்று உணர்ந்த இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியா அரசினர் 1863-லிருந்தே இந்துக்களுக்கு இந்த இடம், இஸ்லாமியர்களுக்கு இந்த இடம் என்று இடத்தை பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்துக்கள் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில குழந்தை ராமர் கோவில் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தார்கள். 5 நேர தொழுகையோட இஸ்லாமியர்களும் கிட்ட தட்ட ஐம்பது  வருடத்துக்கு மேல ஒற்றுமையா வழிபட்டு வந்துட்டு இருந்திருக்காங்க .

அயோத்தி வரலாறு | History of Ayodhya

History of Ram Janma Bhoomi in Tamil 

1949-ஆம் ஆண்டு மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டது என கூறப்பட்டதால, இது பெரும் பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் அரசு இருதரப்பினரையும் மசூதிக்குள் நுழைய கூடாது என்று ஆணை பிறப்பித்து, அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என அறிவித்தது. 1950 களில் அயோத்தியில் உள்ள சிலைகளை அகற்ற கூடாது என்ற வழக்கு தொடரப்பட்டது.

மாரி மாரி தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வந்தது. 1986-ல் இந்துக்கள் மசூதி சென்று வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி ஆனைவெளியிட்டர். 1989-ல் இந்த சர்ச்சைக்குரிய இடமான அயோத்தி கோவிலுக்கான இடம் என்று பலரால் வழக்கு தொடரப்பட்டது.

இப்படி வழக்குகள் குவிய 1991-ல் UP அரசு 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. 2002-ஆம் ஆண்டு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடத்திற்கு சொந்தம் கூறி வழக்கு தொடர்ந்தார்கள். இதுபோன்ற நிறைய வழக்குகள் தொடரப்பட்டு வந்துகொண்டே இருந்தது.

இறுதித் தீர்ப்பு

தொடர்ந்து நடைபட்ட வழக்குகளில் கடைசீயாக தீர்வு கிடைத்தது. அயோத்தி இந்தியர்களுடையது என்றும் , சன்னி வக்ப் வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று கடைசி தீர்ப்பு வந்தது.

இதனை அடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2020 ஆம் ஆண்டு இராமர் கோயில் கட்ட பூமிபூசை நடத்தப்பட்டது, ஒருவழியாக கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. ஜனவரி 22, 2024-ல் இதற்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement