ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிப்பது எப்படி | Share Market For Beginners in Tamil
ஹாய் நண்பர்களே வணக்கம் இன்று அனைவருக்கும் முக்கியமான தகவல்களுடன் இந்த பதிவு. என்னவாக இருக்கும் என்று அனைரும் யோசித்து இருப்பீர்கள். யோசிக்காமல் அடுத்து என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். அது என்னவென்றால் ஷேர் மார்க்கெட் பற்றி தான். இதில் நமக்கு என்ன இருக்கிறது என்று முழுமையாக படிக்காமல் போகாதீர்கள். பங்கு சந்தையில் 1000 ரூபாய் பணம் வைத்தும் கூட முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும், அது எப்படி முடியும் என்பதை இன்றைய பதிவில் காண்போம். பங்கு சந்தையில் அனைவருமே முதலீடு செய்ய முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முதலீடு செய்ய முடியும். ஷேர் மார்க்கெட் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? என்று இந்த லிங்க் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். வாங்க இப்போது முதலீடு போட்டால் எப்படி லாபத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படி:
பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் முதலாவதாக செய்ய வேண்டியது உங்களுடைய பெயரில் Demat Account மற்றும் Trading Account ஓபன் செய்ய வேண்டும். இதனை தொடங்குவதில் சரியாக தீர்மானித்துக்கொண்டு தொடங்க வேண்டும். அனைவரும் இந்த கணக்கை தொடங்குவதில் அதிகம் கவனம் செல்லுவதில் நேரத்தை கடத்திவிடுவார்கள். ஒரு DEMAT Account ஓபன் செய்வது இப்பொழுது மிகவும் எளிது, நிறைய Startup FINTECH நிறுவனங்கள் இப்பொழுது வந்துவிட்டது அவற்றை பயன்படுத்தி உங்களது DEMAT Account ஈஸியாக ஓபன் செய்து கொள்ளலாம்.
கணக்கை தொடங்குவதில் நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு, அடுத்து எந்த கம்பெனியில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் நேரத்தை செலவுசெய்தால் மிக சிறந்த லாபத்தினை எடுக்க முடியும்.
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? |
ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிப்பது எப்படி?
கணக்கு தொடங்கிய பின் Investment செய்வதா..? Trading செய்வதா..? என்ற குழப்பத்தில் இருப்பீர்கள்.
Investment என்பது அதாவது ஒரு வீடோ அல்லது இடமோ வாங்கினால்.? இன்றைக்கு வாங்கிவிட்டு மறுநாள் அதிகம் லாபம் வந்துள்ளதா என்பதை பார்க்கமாட்டோம் ஏனென்றால் இதில் லாபம் கிடைப்பது எப்போவது மட்டுமே அதாவது 2 வருடம் அல்லது 5 வருடம் கழித்து விலை ஏறினால் மட்டுமே லாபம் கிடைக்கும். இதெல்லாம் அதிகம் நாட்களுக்கு அப்புறம் கிடைக்கக்கூடியது இதை தான் long term investment என்று சொல்வார்கள்.
Trading என்பது இன்றைக்கு வாங்குவதை நாளை விற்கலாமா? காலையில் வாங்கினேன் நாளைக்கு ஏற்றிவிடுமா? என்று நினைத்து அதனை விற்கலாமா என்று யோசிக்க வைப்பது Trading என்பார்கள்.
How To Earn Money From Share Market in Tamil:
நீங்கள் முதலில் ஒரு கம்பெனியில் முதலீடு செய்தால் போதும் அது மட்டும் போதுமா ? என்று கேட்டால் போதும். இப்போது எந்த கம்பெனியில் முதலீடு செய்தால் லாபம் பெற முடியும் என்று யோசித்து அதில் முதலீடு செய்யுங்கள். எடுத்துக்காட்டாக: ஒரு பிஸ்கேட் சாப்பிடுவீர்கள் அது உங்களுக்கு பிடிக்கும் என்றால் அந்த கம்பெனியை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள நிச்சயம் உங்களுக்கு நேரம் இருக்கும் பொறுமையும் இருக்கும்.
அவர்கள் பிஸ்கேட் மட்டும் தான் தயாரிக்கிறர்களா என்று தெரிந்துகொள்ளவும். அவர்களுக்கு மொத்தம் எத்தனை பொருட்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்துகொள்ளவும். இத்தனை விஷத்தையும் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்று யோசிப்பீர்கள். அதற்காக நிறைய பேர் பணத்தை கொடுத்து நிறைய பேர் இந்த விவரங்களை பற்றி தெரிந்துகொள்வார்கள். ஆனால் எந்த வித பணத்தையும் கொடுக்காமல் தெரிந்துகொள்ள நிறைய விதமான விஷயங்கள் உள்ளது. money control என்று இணையதளத்தில் உங்களுக்கு பிடித்த கம்பெனியின் பெயரை கொடுத்தால் போதும்.
கம்பெனியின் முழு விவரங்களும் வரும். அதாவது அந்த கம்பெனி போன வருடம் எவ்வளவு முதலீடு செய்தார்கள் அதற்கான லாபம் எவ்வளவு என்ற அனைத்து விவரங்களும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இப்போது முதலீடு செய்யும் அனைவரும் வரும் காலத்தில் அந்த கம்பெனி எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்து முடிவு செய்கிறார்கள் ஆனால் நாம் இப்போது இருக்கும் காலத்தில் எப்படி லாபம் பெற முடியும் என்பதை நினைத்து முதலீடு செய்ய வேண்டும் என்பதில் நினைவு இருக்க வேண்டும்.
முதலில் ஒரு கம்பெனியில் முதலீடு செய்யும் போது அந்த கம்பெனி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும், இரண்டாவது அவர்கள் வருக்காலத்தில் எத்தனை பொருட்களை வெளியிடுவார்கள் அவர்களுடைய ஆளுமை திறன் என்ன, எந்த மாதிரியான மாடல்களை கொண்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ளவும். அதன் பிறகு investment செய்ய வேண்டும். மேல் கொடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால் போதும் நிச்சயம் லாபத்தை பெற முடியும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் சொல்கிறார்கள், பெரிய பெரிய ஆட்கள் சொல்கிறார்கள் என்பதால் மட்டும் அதில் முதலீடு செய்யாதீர்கள். உங்களுடைய பணம் உங்களுடைய விளையாட்டு நீங்கள் விளையாட்டால் மட்டுமே மதிப்பெண் பெற முடியும். அது போல் தான் உங்களுடைய தனிப்பட்ட முயற்சியில் நன்றாக தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |