Aarilum Saavu Noorilum Savu Meaning in Tamil
தினமும் நமது பொதுநலம். காம் பதிவின் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்னெவென்றால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பழமொழி கூறுவதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படியுங்கள்=> ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழி விளக்கம் தெரியுமா
பழமொழிக்கான உண்மை அர்த்தம்:
பொதுவாக நாம் பல பழமொழிகளை கேட்டிருப்போம் சில சமயங்களில் கூறியும் இருப்போம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது.
அதேபோல தான் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியையும் கூறியிருப்போம். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது.
இதற்கான உண்மையான அர்த்தம் சேர, சோழ, பாண்டியர்கள் முதல் தமிழகத்தை ஆண்ட சிற்றரசர்கள் வரை அனைவருமே எந்நேரமும் போரிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அப்படி போரில் ஈடுபடும் பொழுது போர் வீரர்களுக்கு மரண பயம் இருக்கக்கூடாது, மரண பயம் இருப்பவன் போர்வீரன் ஆக முடியாது.இதையும் படியுங்கள்=> Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா
ஆகையால் வீரர்களுக்கு உற்சாக மூட்டும் வகையில் கூறப்பட்ட்டது தான் இந்தப் பழமொழி. சாவு என்பது ஆறு வயதிலும் வரலாம், நூறு வயதிலும் வரலாம், சாவைக்கண்டு பயப்பட்டால் ஒரு பயனில்லை என்பது தான் இதனின் அர்த்தம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |