B Letter Name Characteristics in Tamil
பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கு கண்டிப்பாக ஒரு பெயர் இருக்கும். அந்த பெயர்களில் ஆரம்பிக்கின்ற முதல் எழுத்துக்கள் எண்களுடன் தொடர்புடையது. அந்த எண்னை வைத்து ஒருவரது குணத்தை தெரிந்துகொள்ள முடியும். அதாவது அவர்களுடைய வழக்கை, திருமணம், தொழில், காதல், கல்வி இது போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். ஒருவருடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து அவர்களை பற்றி தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும் அது பொதுவான பலன்கள் தான். சரி உங்கள் பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா அப்படியென்றால் உங்கள் குணத்தை பற்றி தோராயிரமாக சொல்கிறான், அது சரியாக இருந்தால் இந்த பதிவுக்கு ஒரு லைக் போடுங்க மற்றும் உங்கள் நண்பருக்கும் B என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறது என்றால் அவர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்ய மறந்துவிடாதீர்கள்.
‘B’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத பாருங்க..!
B என்ற எழுத்தில் உங்களுடைய பெயர் ஆரம்பிக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் மிகவும் பெருமைசாலியாக இருப்பீர்கள்.
உங்களிடம் அதிக தன்னம்பிக்கை காணப்படும். அதேபோல் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டே செய்வீர்கள்.
இவர்களுடைய வாழ்க்கையில் காதல் என்பது அவ்வளவு பெரிய அளவில் இல்லை என்றாலும் இவர்களும், காதல் செய்பவர்களின் பட்டியலில் இருக்கின்றன. இவர்கள் காதல் பற்றிய ஆக்கபூர்வமான மனம் மற்றும் அழகான கருத்துக்களை கொண்டுள்ளனர். இவர்கள் தன துணையுடன் தனியாக சுற்றுளே அல்லது வெளியிடங்களுக்கு சென்றுவர விரும்புவார்கள்.
B என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறது என்றால் நீங்கள் மிகவும் சென்சிடிவுவான நபர் என்று சொல்லலாம். மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டீர்கள்.
வம்புதுப்புக்கெல்லாம் செல்லமாட்டீர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கு சமாதானமாகவே சென்றுவிடுவீர்கள். உங்களிடம் அதிக கற்பனை திறன் இருக்கும்.
நீங்கள் செயல்படுத்தும் அனைத்து விஷயங்களுக்கு புதிய புதிய யுத்திகளை, யோசனைகளும் அதிகளவு வந்துகொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு நல்ல யோசனைகளையும் வழங்குவார்கள்.
குறிப்பாக உங்களிடம் அதிக தெய்வ நம்பிக்கை இருக்கும், ஆன்மிகத்தில் அதிக ஈர்ப்பு இருக்கும்.
மற்றவர்களை நம்பி சிறிய காரியங்களை கூட ஒப்படைக்க மாட்டார்கள், உங்களுடைய வேலையை நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டும் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று நினைப்பீர்கள்.
உங்களுக்கு பொய் பேச பிடிக்காது, உண்மை பேச மட்டும் தான் பிடிக்கும். மொத்தத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் சிறப்பிக்க அமைத்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைப்பீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 S என்ற வார்த்தையில் பெயர் கொண்வர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |