CTC பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் | CTC Meaning in Tamil

Advertisement

CTC என்றால் என்ன? | What is CTC in Tamil | CTC Salary Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் CTC என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். CTC இதை மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் Appointment லெட்டரில் கண்டிப்பாக இருக்கும். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் மற்றும் CTC என்றால் என்ன என்றெல்லாம் யாரிடமாவது விவாதித்து இருப்பீர்கள். அதற்கான விடை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கவலை பட வேண்டாம்? இந்த தொகுப்பில் CTC பற்றிய விவரங்களை நாங்கள் கொடுத்துள்ளோம், அதை படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க CTC என்றால் என்ன (CTC Meaning in Tamil) என்பதை படித்தறியலாம்.

CTC Meaning in Tamil | What is Your Current CTC Meaning in Tamil:

  • Cost to Company என்பது தான் இதற்கான விரிவாக்கம் (CTC Full Form Meaning in Tamil)

சிடிசி என்றால் என்ன?

  • அதாவது CTC மொத்த செலவினங்களை குறிக்கிறது. கம்பெனி பணியாளருக்கு வருடத்தில் எவ்வளவு செலவு செய்கிறது மற்றும் பணியாளருக்கு வழங்கப்படும் வசதிகளும் இதில் அடங்கும்.
  • ஒரு நிறுவனம் உங்களை வேலைக்கு எடுக்கும் போது, அந்நிறுவனம் உங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் சிடிசி எனப்படும். இவை Gross, PF, ESI, Allowance, Professional Tax போன்றவைகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு உங்களுக்கு இறுதியில் கிடைக்கும் வருமானம் தான் உங்களுடைய Take Home Salary ஆக இருக்கும்.

Gross Salary Meaning in Tamil:

  • Gross Pay என்பதில் உங்களுடைய பேசிக் வருமானம், DA (Dearness Allowance), HRA, Medical Allowance, Food Allowance, Travel Allowance போன்றவை அடங்கும். அதாவது உங்களுடைய மொத்த சம்பளம்.

Monthly Net Salary Meaning in Tamil:

  • Net Salary இதில் EPF (12%), ESI 0.75%, TDS, PT போன்றவை அடங்கும். நிகர சம்பளம் என்பது பிடித்தங்கள் போக உங்கள் கையில் கிடைக்கும் சம்பளம்.
  • நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது கண்டிப்பாக சம்பளத்தை முடிவு செய்திருப்பீர்கள். அதை பற்றி பேசும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி இருக்கும், இது PF மூலம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை Confirm செய்து கொள்ளவும்.

What is CTC in Salary With Example in Tamil

உதாரணம்:

  • உதாரணத்திற்கு பல்லவி என்பவரின் ஆண்டுக்கான மொத்த சம்பளம் ரூ. 6,00,000 என வைத்துக்கொள்வோம். அதில் அடிப்படை சம்பளம் Rs.3,50,000, HRA – Rs.96,000, LTA – Rs.50,000, DA – Rs.1,04,000 இவற்றையெல்லாம் மொத்தமாக கூட்டினால் ரூ. 6,00,000 வரும்.

பிடித்தங்கள்:

  • வருடாந்திர சம்பளத்தில் இருந்து PF – Rs.42,000 Gratuity- Rs.18,000, Insurance – Rs.3,500 Professional Tax- Rs.2,500 போன்றவற்றை கழித்தால் நிகர சம்பளம் 5,34,000 வரும்.

42,000 + 18,000 + 3,500 + 2, 500 = Rs. 66,000

6,00,000 – 66,000 = Rs. 5,34,000

  • இதில் நிறுவனத்திற்கான செலவு CTC 6,63,500 ஆகும். அதாவது
  • Annual income – ரூ. 6,00,000
  • PF – 42,000
  • Gratuity- 18,000
  • Insurance – 3,500
  • இவற்றை கூட்டினால் மேற்கூறிய CTC தொகை வந்துவிடும்.

6,00,000 + 42,000 + 18,000 + 3,500 = Rs. 6,63,500

  • நீங்கள் எந்த வேலைக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தில் எதற்காக பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்கள் சலுகைக்கு பதிலாக கூப்பன்களை பெற்று கொள்கின்றனர். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது.
IPO என்பதற்கான பொருள்

 

மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>  அர்த்தம்
Advertisement