Insurance என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Insurance Meaning in Tamil

Insurance Meaning in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் Insurance பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளப் போகிறோம். Insurance என்றால் என்ன..? உங்களுக்கு தெரியுமா..? Insurance தமிழில் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. நமது வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத நிகழ்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும் நடை பெறலாம். நாளை என்ன நடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. நாம் முதலில் நம் வாழ்க்கையை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதுவே நம் புத்திசாலித்தனம் ஆகும். அது போன்ற ஒரு முயற்சியே காப்பீடு ஆகும். வாங்க நண்பர்களே காப்பீடு பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன

காப்பீடு என்றால் என்ன..? 

காப்பீடு என்பது குறிப்பிட்ட இழப்பு, சேதம், நோய் அல்லது இறப்புக்கான இழப்பீட்டு உத்தரவாதத்தை வழங்கும் ஒரு முறை ஆகும். காப்பீடு என்பது ஆபத்தை பரிமாறி கொள்ள உதவும் ஒரு ஆயுதம் ஆகும். காலம் காலமாக காப்பீடு பல வடிவங்களிலும் மற்றும் பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது காப்பீடு அல்லது காப்புறுதி என்று அழைக்கப்படுகிறது.

இந்த காப்பீட்டு முறை பண்டைய காலத்தில் நடைமுறையில் இருந்தது. காப்பீடு ஆபத்தை சந்திக்கும் ஒரு நபருக்கான உதவியாக கருதப்பட்டது. இந்த காப்பீட்டை வழங்கும் முறையை நவீன காலத்தில் தனி நபர்கள் அல்லது ஒரு நிறுவனம் இதை வழிநடத்தி வந்தது. பொதுவாக காப்பீட்டு தொகை எல்லா விதமான சேதங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த காப்பீட்டு தொகை ஆபத்தை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கு, அந்த குழுவை சார்ந்தவர்கள் அளிக்கும் ஒரு பாதுகாப்பு தொகையாகும். இது போன்ற முறை காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இழப்பீடாக பணம் செலுத்தப்படுகிறது. காப்பீடு இழப்பீட்டு உத்தரவாதம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் நபர் திடீரென இறந்து விடுகிறார். அப்பொழுது அந்த குடும்பம் வறுமையில் இருக்கும் நிலை ஏற்படும். அந்த நேரத்தில் இந்த காப்பீடு அந்த குடும்பத்தை காப்பாற்றும்.

உதாரணமாக,  நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த கடையில் எதாவது சேதம் ஏற்பட்டால் அந்த இழப்பிற்காக உங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன..?

இந்த காப்பீட்டு நிறுவனம் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடம் இருந்து பிரீமியம் தொகை வசூலிக்கின்றது. அதன் பின் இழப்பின் காரணமாக யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படுகின்றது. காப்பீடு வழங்கும் நிறுவனம் தன்னுடைய லாபத்தை எடுத்து கொண்டு மீதம் உள்ள தொகையை இழப்பிற்காக வழங்குகின்றது. இந்த காப்பீடு பல வகைகளில் வழங்கப்படுகிறது.

காப்பீடு வகைகள்:

  1. வாகனக் காப்பீடு
  2. இல்லக் காப்பீடு
  3. ஆயுள் காப்பீடு
  4. தீவிர நோய் காப்பீடு
  5. சுகாதார காப்பீடு
  6. முக்கிய மனிதன் காப்பீடு
  7. வெளிநாட்டு பயண காப்பீடு
  8. தினசரி பணக் கொடுப்பனவு காப்பீடு
  9. வணிக காப்பீடு
  10. சமுதாய சுய காப்பீடு
  11. வாகன நிதி காப்பீடு
  12. கால்நடை காப்பீடு
  13. பொது காப்பீடு

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com