கொன்றால் பாவம் தின்றால் போச்சு | Kondral Paavam Thindral Pochu Meaning in Tamil
நண்பர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கம்..! ஏன் அப்படி வணக்கம் சொல்கிறேன் என்றால் கொஞ்சம் பழமையாக ஆரம்பிக்கலாம் என்பதற்காக தான். நாம் எப்போதும் வீட்டில் இருந்தால் அங்கு அம்மா அல்லது பாட்டி என்று இருப்பார்கள். அவர்கள் பேச்சுகள் அனைத்தும் கொஞ்சம் பழமையாக இருக்கும். அதாவது, பழமொழி சேர்த்து பேசுவார்கள். அவர்கள் ஊருக்கு என்று ஒரு வார்த்தை வடிவமைப்பு உள்ளது. அதை தான் அவர்கள் பின்பற்றுவார்கள்.
அப்படி அவர்கள் பேசும் வார்த்தையில் ஏதாவது ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த பழமொழிகளை பற்றி நமக்கு தெரியவில்லையென்றாலும் அதனை கேட்டு தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் அவர்களுக்கு அதற்கான முழு அர்த்தம் தெரியாது.
இந்த கால கட்டத்தில் நாம் அனைவருமே தெரிந்துகொள்ள ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துவோம் அல்லவா..? அதில் நீங்கள் தேடுவதை வைத்து உங்களுக்கான விடை கிடைக்கும். அதேபோல் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறது என்னவென்றால் கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வோம் வாங்க..!
கொன்றால் பாவம் தின்றால் போச்சு:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..? நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மாமிசம் சாப்பிட்டால் பாவம் தின்றால் போச்சி என்று அவர்களை அவர்களே சரிக்கட்டி கொள்கிறார்கள். ஆனால் அதற்கு உண்மையில் என்ன அர்த்தம் தெரியுமா..?
மாமிசம் சாப்பிடுபவர்களை அவர்களின் இறப்பிற்கு பிறகு நரகத்திற்கு அழைத்து செல்வார்கள். அப்போது எமலோகத்தில் இருப்பவர்கள் பூமியில் வாழும் போது உயிரினங்களை கொன்றாய் அல்லவா என்று சொல்லி அவர்களின் சதையை அறுப்பார்கள். அதனை எடுத்து பூமியில் இருக்கும் போது உயிரினங்களை கொன்றாய். ஆகவே உன்னுடைய சதையை நீயே சாப்பிடு என்று சொல்லி ஊட்டிவிடுவார்கள். இதுபோல் சாப்பிட பிறகு தான் அவர்கள் செய்த பாவம் தீரும். இதனை தான் கொன்ற பாவம் தின்றால் தீரும் என்பார்கள்.விருந்தும் மருந்தும் மூணு நாள் தான் என்று சொல்லும் பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா
கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |