NEFT என்பது என்ன..? இது பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

NEFT Meaning in Tamil

ஹலோ நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றித் தான் பார்க்க போகிறோம். NEFT என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..? NEFT பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். NEFT என்பது தமிழில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. NEFT என்பது ஒரு ஆன்லைன் கட்டண முறை ஆகும். இந்த முறை பெரும்பாலும் வங்கிகளில் பயன்படுத்த படுகிறது. மேலும் NEFT பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன?

NEFT என்றால் என்ன..?

NEFT என்பது ஆங்கிலத்தில் National Electronic Funds Transfer என்று கூறப்படுகிறது. NEFT பெரும்பாலும் வங்கிகளில் பயன்படுத்த கூடிய ஒரு ஆன்லைன் கட்டண முறையாகும்.

இந்த NEFT முறையை பயன்படுத்தி எந்த ஒரு நபரின் வங்கி கணக்கிலிருந்தும் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் 1 ரூபாயில் இருந்து லட்ச ரூபாய் வரை எளிதாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

ஒரு வங்கியிலிருந்து அந்த வங்கியின் வேறு கிளைக்கு பணம் அனுப்புவது என்பது எளிதான விஷயம் தான். ஆனால் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு NEFT கட்டாயம் தேவைபடும்.

அந்த எண் தெரியாவிட்டால் பணம் அனுப்புவதற்கு பல சிக்கல்கள் ஏற்படும். இந்த NEFT  முறையை பயன்படுத்தி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். NEFT முறையில் பணம் அனுப்புவதற்கு குறைந்தது 1 மணி நேரம் வேண்டுமானாலும் தேவைப்படும்.

MICR பற்றிய தகவல்கள்

அதுமட்டுமின்றி NEFT முறையில் பணம் அனுப்ப வார நாட்கள் கூட தேவைப்படும். ஆனால் NEFT முறையின் மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு கொடுத்துள்ளது.

இந்த NEFT  முறையின் மூலம் பணம் உடனடியாக பயனாளருக்கு போய் சேர்ந்துவிடும். ஆனால், இந்த NEFT முறையின் மூலம் பணம் அனுப்புவதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணங்கள் சில வங்கிகளில் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.

இது ஆன்லைன் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. அனைத்து வங்கிகளிலும் இந்த NEFT முறையின் சேவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement