வங்கிகளில் பயன்படுத்தப்படும் RTGS சேவை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

RTGS Full Form in Tamil

RTGS Meaning in Tamil..! 

வணக்கம்  பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் RTGS என்பது என்ன என்பதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த RTGS முறை பெரும்பாலும் வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த RTGS முறையை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் அனுப்ப முடியும். RTGS  என்பது என்ன..? இந்த RTGS முறையால் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன

RTGS என்றால் என்ன..? 

RTGS என்பது வங்கிகளில் பணம் அனுப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இந்த RTGS முறையை பயன்படுத்தி வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கிக்கு விரைவாக பணம் அனுப்பமுடியும்.

RTGS Full Form in Tamil:

இந்த RTGS என்பது ஆங்கிலத்தில் Real Time Gross Settlement என்பதாகும். RTGS என்பதை நிகழ்நேர பெருந்திரள் தீர்வு”என்று கூறலாம்.

இந்த RTGS முறையை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வேறு எந்த வங்கி கிளைக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பமுடியும்.

ஆண்டு முழுவதும் RTGS சேவைகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இது இந்திய வங்கித் துறைக்கே பெரிதும் பயன்பட்டு வருகிறது. இந்த RTGS முறையானது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன

ஆனால் இந்த RTGS சேவையை 24 மணி நேரமும் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. நீங்கள் மற்றொருவரின் கணக்குக்கு இந்த RTGS  முறையை பயன்படுத்தி பணம் அனுப்புகிறீர்கள் என்றால் அது அவருடைய Account -க்கு உடனடியாக சென்று விடும்.

RTGS முறையில் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வாங்கி கணக்கிற்கு எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பணம் அனுப்பமுடியும். அதேபோல ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்புவதற்கு ரூ. 24.50 கட்டணமாக செலுத்த வேண்டும். 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் ரூ. 49.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணம் வங்கிகளை பொறுத்து வேறுபடுகிறது.

இந்த RTGS சேவை வருவதற்கு முன்பு வங்கிகளில் பணம் அனுப்புவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்படி பணம் அனுப்பும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால், அதற்கான நஷ்டத்தை பணம் செலுத்தும் வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த RTGS  சேவை வந்த பின் இதுபோன்ற பிரச்சனைகள் தவிர்க்கபட்டது. இந்த RTGS  சேவை முறை அனைத்து வங்கிகளிலும் பயன்பட்டு வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com