T Letter Name Personality in Tamil
வணக்கம் நண்பர்களே.! ஒவ்வொரு நாளும் உங்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் பதிவினை தொடர்ந்து பார்வையிடுங்கள். உங்களை பற்றி நீங்களே படிப்பது சுவாரஸ்யமாக தானே இருக்கும். இப்பொது T என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் பெயர் L என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா.! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள் ..!
T என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்:
T என்ற எழுத்தில் பெயர் உடையவர்கள் பேச்சு திறமையால் மற்றவர்களை ஈர்க்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் எழுத்து அழகாக இருக்கும்.
இவர்களிடம் இந்த செயல் செய்யலாமா என்று மற்றவர்கள் வந்து ஆலோசனை கேட்டால் அதற்கான தகுந்த யோசனைகள் சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த விஷயத்தையும் மறைத்து வைக்க மாட்டார்கள். எந்த விஷயம் தோன்றினாலும் யாரிடம் சொல்ல வேண்டுமோ நேரடியாக சொல்லி விடுவார்கள். மறைமுகமாக பேச மாட்டார்கள்.
இவர்களின் கூட இருப்பவர்களை புரிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மேலும் ஒரு செயல் செய்கிறார்கள் என்றால் அதற்கு மற்றவர்கள் ஆலோசனை சொன்னால் அதை கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் தான் செய்வார்கள்.
எந்த வேலை செய்தாலும் அதை நேர்மையாகவும், நியாமாகவும் செய்து முடிப்பார்கள். ஒரு வேலை தொடங்குவதர்க்கு முன் இந்த செயல் செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து தான் செயல்படுவார்கள். எடுத்தோம் முடித்தோம் என்று இருக்க மாட்டார்கள்.
இவர்களிடம் 1 பர்சன்ட் கூட பொறாமை குணம் இருக்காது. உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். புகழ், ஆசை இதையெல்லாம் விரும்பமாட்டர்கள்.
புத்தகம் அதிகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த சமுதாயத்தை ஏதாவது மாற்ற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். இவர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து தான் காணப்படும்.
இவர்கள் உணவு இருந்தால் போதும் என்று நினைத்து சாப்பிட மாட்டார்கள். அந்த உணவானது ருசியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களுக்கு இசை கேட்பது மிகவும் பிடிக்கும். மேலும் கஷ்டமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி இசை தான் கேட்பார்கள்.
இவர்கள் எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடித்துவிடுவார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |