Virtual Reality என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Virtual Meaning in Tamil..!

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் Virtual என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வரும் நீங்கள் இன்று இந்த பதிவின் மூலம் Virtual என்றால் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். வாங்க நண்பர்களே Virtual பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன

Virtual என்றால் என்ன..? 

Virtual என்பது தமிழில் மெய்நிகர் என்று சொல்லப்படுகிறது. இது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் யுகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நபர் வெவ்வேறு இடங்களைக் கண்டறிந்து தொடர்பு கொள்ளும் திறனை மெய்நிகர் என்று கூறுகிறோம்.

மெய்நிகர் என்பது இடத்திற்கும் நேரத்திற்கும் இடையே ஒரு சக்தி வாய்ந்த உறவைக் உருவாக்குகிறது.

மெய்நிகர் என்பதை டிஜிட்டல் யுகத்துடன் தொடர்புடையது என்று கூறலாம். இது இல்லாத ஒரு விஷயத்தை நம் கண் முன்னால் காட்டுகிறது.

Virtual Reality என்றால் என்ன..? 

Virtual Reality என்பது தமிழில் மெய்நிகர் உண்மை என்று அழைக்கப்படுகிறது. Virtual Reality என்றால் ஒரு விஷயம் நம் முன்னாடி உண்மையாக இருக்காது. ஆனால் அந்த விஷயத்தை நம்மால் பார்க்க முடியும் உணர முடியும். அதுவே Virtual Reality ஆகும்.

இதன் மூலம் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல உணர முடியும். இந்த Virtual Reality மூலம்  ஒரு நபர் சுற்றுச்சூழலை உண்மையான உலகம் போல அனுபவிக்கவும் கையாளவும் முடியும். இது கணினி விளையாட்டுகளில் காணப்படுவது போன்ற அமைப்பில் இருக்கும்.

இதை பயன்படுத்தும் நபரின் முன்னால் உண்மையான வாழ்க்கை இருப்பது போல இருக்கும். அதுவே Virtual Reality ஆகும்.

இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவத்திலும், விண்வெளி ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டன. காரணம் அவர்களுக்கு உண்மையான பயிற்சிகள் கொடுக்க முடியாத நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.

நம்மால் போக முடியாது என்று நினைக்கும் இடத்திற்கு கூட இந்த Virtual Reality -யை பயன்படுத்தி அந்த இடத்தை நம் முன்னால் காணமுடியும். அதாவது, ஒரு இடத்திற்கு நாம் செல்லாமலேயே அந்த இடத்தில் இருப்பது போன்ற காட்சி அனுபவம் தருவதே Virtual reality எனப்படும்.

இன்றைய கால கட்டத்தில் இந்த Virtual Reality மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இந்த Virtual Reality யை பயன்படுத்தி நமக்கு பிடித்த இடத்தை கூட நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்க முடியும்.

இந்த தொழில்நுட்பம் தோன்றி பல வருடங்கள் ஆனாலும், இதனை சாதாரண மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இல்லை. ஆனால் Google –ன் முயற்சியால் அனைத்து தரப்பு மக்களும் Virtual Reality அனுபவத்தை பெற முடியும்.

இனி வரப்போகும் கால கட்டத்தில் இதன் செயல்திறன் விரைவாக பயன்படுத்தப்படும் என்று கூறலாம். இதன் பயன்பாடு இனிவரும் காலங்களில் அதிகரிக்ககூடும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement