விசா என்றால் என்ன தெரியுமா?

Advertisement

விசா என்றால் என்ன.? 

வணக்கம் நண்பர்களே இன்று நம்  பதிவில் விசா என்றால் என்ன அவை எதற்கு பயன்படுகிறது என்றுதான் தெரிந்துகொள்ளப் போகிறோம். விசா என்பது ஒரு நபர் வெளிநாடுகள் செல்வதற்கும், வெளிநாட்டியில் இருந்து உள்நாட்டிற்கு வருவதற்கும் விசாபயன்படுகிறது. பெரும்பாலும் சில நாடுகளில் விசா இல்லாமலே பயணிப்பதற்கு அனுமதிக்கபடுக்கிறார்கள். மேலும் விசா என்றால் என்ன அவை எதற்கு பயன்படுகிறது. விசாவின்  வகைகள்  என்னெவென்று நம் பதிவில் மூலம் பார்க்கலாம் வாங்க.

விசா வகைகள்

Visa Meaning in Tamil: 

விசா என்பதற்கான அர்த்தம் Visitors International Stay Admission (VISA) ஒரு நாட்டின் நுழைவு சான்று, அயல்நாட்டு நுழைவு சான்று, இசைவு என்று அழைக்கப்படுகிறது.

விசா என்றால் என்ன: 

 விசா என்பது ஒரு  நாட்டு குடிமகன் அல்லாத வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லவும், அந்த நாட்டில் குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகளால் உங்கள் நுழைவுக்கு அனுமதி வழங்கி கொடுக்கப்படும் ஒரு ஆவணச்சீட்டு அல்லது முத்திரை பதித்த ஒரு சிறு தாள் ஆகும். 

இந்த விசா நுழைவு  சான்றுதல் ஒரு நாட்டிற்கு உள் செல்வதற்கும் வெளி வருவதற்கும் குடியேற்ற அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ஆவணம்.

சோவிய ஒன்றியத்தில், அந்த நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அந்த நாட்டை விட்டு வெளியேற விசா கட்டாயம் தேவைப்படுகிறது.

விசா நுழைவதற்கான கால அவகாசம் மற்றும் காலக்கோடு, வேலை செய்வதற்கான அனுமதி, வேலை செய்வதற்கான தடை போன்றவற்றை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விசா வகைகள்:

விசாவில் இரண்டு விதமான வகைகள் உள்ளன அவை வழமையான விசா வகைகள், வழமையிலா விசா வகைகள் ஆகும். மேலும் அவற்றை பற்றி காணலாம்.

வழமையான விசா வகைகள்:

  • கடுப்பு விசா 
  • பயணியர் விசா 
  • வணிக விசா
  • தற்காலிக பணியாளர் விசா
  • வருகை போது விசா 
  • வாழ்க்கை துணை விசா 

வழமையிலா விசா வகைகள்:

  • மாணவர் விசா
  • பணியாற்றும் விடுமுறை விசா
  • தூதுவர் விசா அல்லது அலுவல் முறை விசா

Passport Visa Tamil Meaning:

பாஸ்போர்ட் விசா என்பது அரசாங்கம் வழங்கும் அதிகாரப்பூரவ பயண ஆவணமாக இருக்கிறது. பாஸ்போர்ட் எடுக்கும் நபர் அந்த நாட்டின் குடிமகன் என்பதை உணர்த்துகிறது. மேலும் வெளிநாட்டிற்கு பயணம் செல்வதையும் அனுமதிக்கிறது.

Visa and Passport Difference:

பாஸ்போர்ட் விசா
பாஸ்போர்ட் என்பது உங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயண ஆவணமாகும், இது நீங்கள் சர்வதேச அளவில் பயணம் செய்யும்போது உங்கள் தேசியத்தை நிரூபிக்கிறது. விசா என்பது நீங்கள் பார்வையிட விரும்பும் நாட்டினால் வழங்கப்படும் ஆவணமாகும். நுழைவு அனுமதிச் சீட்டு, நாட்டின் பிரதான நிலப்பகுதிக்குள் நுழைந்து ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் நோக்கத்திற்காக தங்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது.
நீங்கள் வெளிநாடு செல்லும் போது பாஸ்போர்ட் அடையாளங்களை சான்றாக பயன்படுகிறது. விசா என்பது ஒரு குறிப்பிட்ட நாட்கள் அங்கு தங்குவதற்கு பயன்படுகிறது.
பாஸ்போர்ட் என்பது உங்கள் பெயர், பிறப்பு, தேசியம், புகைப்படம் போன்றவற்றைக் கொண்ட சான்றாக இருக்கும். விசா என்பது நீங்கள் எதற்காக வந்துளீர்கள், எதனை நாட்கள் இருப்பீர்கள் என்பதை குறித்திருக்கும் தகவல் சீட்டாக இருக்கும்.
ஒரு பாஸ்போர்ட் 5-10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசாவின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை மாறுபடும்!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement