அஞ்சனக்கல் ஹேர் டை | Anjana Kal Hair Dye in Tamil | அஞ்சனக்கல் பயன்படுத்தும் முறை
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே சிறிய வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரியான உணவு முறையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சத்து குறைவு, அடிக்கடி விதவிதமானம் ஷாம்பு, கூந்தல் எண்ணெய்களை பயன்படுத்துவது என்று நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற காரணங்களினால் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஆண் பெண் என இருவருக்கும் வந்துவிடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக நாம் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் டைகளை வாங்கிபயன்படுத்துகிறோம். இதனால் முடியின் நிறம் மாறலாம், ஆனால் உடலிற்கு தீமையை தர கூடியது. இயற்கையான முறையில் டைகளை தயாரித்து பயன்படுத்துவது ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நமக்கு எளிதில் கிடைக்கும் மூலிகை செடிகளை கொண்டு நரை முடியை படி படியாக கருமையாக்கலாம், அது நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் கொடுக்காது. அந்த வகையில் அஞ்சனக்கல் ஹேர் டை தயாரிப்பது எப்படியென்று அறிந்து கொள்வோம்.
Aanjana Kal Uses in Tamil | Anjana Kallu Benefits for Hair:

தேவையான பொருட்கள்:
- அஞ்சனக்கல் பவுடர் – 1/2 ஸ்பூன்
- அவுரி பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
அஞ்சனக்கல் ஹேர் டை செய்யும் முறை – Anjana Kal Hair Dye in Tamil:
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் 1/2 ஸ்பூன் அஞ்சனக்கல் பவுடர், ஒரு ஸ்பூன் அவுரி பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள், அவ்வளவு தான் அஞ்சனக்கல் ஹேர் டை தயார்.
பயன்படுத்தும் முறை:
இந்த கலவையை நரைமுடி உள்ள அனைத்து இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், பின் தலை அலசுங்கள். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தாலே போதும் நரை முடி ஒரே வாரத்தில் முழுமையாக மாறிவிடும். இதை பயன்படுத்துவதால் எந்த இரு பக்க விளைவுகளும் வராது.
அஞ்சனக்கல் பயன்கள் | Anjanakal Uses in Tamil:
அஞ்சனக்கல் பொதுவாக நமது முன்னோர்கள் அதிகளவு ஹேர் டையாகவும், மையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த அஞ்சனக்கல் பவுடருக்கு நரை முடியை கருமையாகும் தன்மை உள்ளது. அதேபோல் அவுரி பொடியும் நரை முடியை கருமைக்கும், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவி செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வெள்ளை முடி கருமையாக இந்த மூன்று பொருள் மட்டும் போதும்.. ஆயுசுக்கும் உங்கள் முடி கருமையாகவே இருக்கும்..!
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














