முடி கொட்டுவதை நிறுத்தி முடி நீளமாக அடர்த்தியாக 100% வளர இந்த ஹேர் டானிக்

Beauty tips for hair in tamil

முடி வளர ஹேர் டானிக் | Beauty Tips for Hair in Tamil

பொதுவாக ஒவ்வொரு பெண்களுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய பெண்களை காணும் போது, நாமும் இது போன்ற கூந்தலை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் பொடுகு, முடி உதிர்தல் போன்றமுடி தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் இந்த ஒரு டிப்ஸை மட்டும் ட்ரை செய்து பாருங்கள் நாள் ரிசல்ட் கிடைக்கும்.

அதாவது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு அருமையானஹேர் டானிக்கு தயாரிக்கும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஹேர் டானிக்கை தலைக்குடிக்கு பயன்படுத்துவதன் மூலம். தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரி ஆகும். மேலும் ஒரே வாரத்தில் உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். சரி வாங்க அந்த ஹேர் டானிக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • டீத்தூள் – ஒரு ஸ்பூன்
  • வெந்தயம் – ஒரு ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • தண்ணீர் – 1 1/2 டம்பர்

ஹேர் டானிக் செய்முறை – Beauty Tips for Hair in Tamil:

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைக்கவும். பின் அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடம்.

தண்ணீர் ஓரளவு சுட்டதும் அதில் ஒரு ஸ்பூன் டீத்தூள், ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

தண்ணீரானது ஒரு டம்ளர் அளவு சுண்டி வரும் அளவிற்கு நன்றாக கொதிக்கவிட வேண்டும். ஆக 10 நிமிடம் நன்றாக கொதிக்கவிடுங்கள் இப்பொழுது அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள வெந்தயம், கருவேப்பிலை, டீத்தூள் ஆகியவற்றில் உள்ள எசன்ஸ் அனைத்தும் தண்ணீரில் இரங்கி நிறம் நன்றாக மாறிவந்திருக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது ஹேர் டானிக் தயார். இதனை நன்றாக ஆறவிடவும் பின் வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

 

தயார் செய்த ஹேர் டானிக்கில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள், பிறகு ஒரு கார்டன் பஞ்சியை பயன்படுத்தி நன்றாக நனைத்து தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 15 நிமிடங்களை வரை லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும், ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் தலை முடி முழுவதும் இந்த ஹேர் டானிக்கை அப்ளை செய்து திரும்பவும் 15 நிமிடங்கள் மிதமாக தலைக்கு மசாஜ் செய்யுங்கள். பின்பு மறுபடியும் ஒரு மணி நேரம் காத்திருங்கள். (கிட்டத்தட்ட இதற்கு உங்களுக்கு 2.30 மணி நேரம் தேவைப்படும் ஆக விடுமுறை நாட்களில் இந்த டிப்ஸை ட்ரை செய்யுங்கள்)

பின் நீங்கள் தலைக்கு எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலை அலசுங்கள், வாரத்தில் ஒரு முறை மட்டும் இந்த டிப்ஸை பாலோ செய்தால் போதும் ஒரு மாதத்திலேயே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும்.

பயன்கள்:

இந்த டானிக் முடி உதிர்வு பிரச்னையை சரி செய்து, உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்கிறது. மேலும் முடி அடர்த்தியாகவும், நிலமாகவும் வளர செய்யும். பொடுகு பிரச்சனையும் சரி ஆகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு கை முளைக்கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami