Hair Pack For Hair Growth in Tamil
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தொடர்ந்து தலை முடி பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும். அதனை சரி செய்ய தினமும் செயற்கை பொருட்கள் வாங்கி தலைக்கு தடவி இன்னும் அதிகமாக முடி கொட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துவது நாம் தான். நாம் இந்த பதிவின் வாயிலாக இயற்கை பொருட்களை வைத்து எப்படி தலை முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க..!
Best Hair Pack For Hair Growth at Home in Tamil:
தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு பழத்தோல்
- தேங்காய்எண்ணெய்
- கற்றாழை ஜெல்
- ஆலிவ் ஆயில்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
ஆரஞ்சு பழத்தோலை எடுத்துக்கொள்ளவும் அதன் பின் அதில் 50 கிராம் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்ளவும். அடுத்து தேங்காய் எண்ணெய் 50 கிராம், வைட்டமின் ஈ காப்ஸ்யூல் – 2, கற்றாழை ஜெல் 3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
இதையும் படியுங்கள்⇒ 2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க..!
ஸ்டேப்: 1
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில், எடுத்து வைத்திருந்த ஆரஞ்சு தோலை சேர்க்கவும், பின்பு அதில் தேங்காய் எண்ணெய் – 50 கிராம், ஆலிவ் ஆயில் – 50 கிராம். வைட்டமின் ஈ காப்ஸ்யூல் – 2 இந்த நான்கு பொருட்களையும் கலந்துவிட்டு கொதிக்கவைக்கவும்.
ஸ்டேப்: 2
ஓரளவு கொதித்து வந்ததும் ஆரஞ்சு தோல் அனைத்துமே கருப்பு நிறமாக மாறிவிடும். அதன் பின் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
முகத்தில் இருக்கும் பள்ளங்கள் மறைய கற்றாழையை ஒரு முறை இப்படி பயன்படுத்தினால் போதும்..!
ஸ்டேப்: 3
கடைசியாக கற்றாழையை 3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும், பின்பு அதில் நாம் செய்த எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும் அதனை நன்கு கலந்துவிடவும், கடைசியாக அதனை எடுத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளவும்,
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயில் நன்கு வாசனை வரும் அதன் வாசனை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை தடவி 1 மணி நேரம் வைத்திருந்து அதன் பின் குளித்துவிடலாம்.
அப்படி வேண்டாம் நான் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் போல் தடவி கொள்ளலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாரத்திற்கு 1 முறை மட்டும் தடவினால் போதும் உங்கள் முடி நீளமாகும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |