Dark Spots Removal Face Pack in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் ஆண்கள் முகத்தில் பருக்கள் வந்தால் அதை அந்தளவிற்கு பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. முகத்தில் பருக்கள் வருவதற்கு முன்னரே முகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
இதனால் முகத்தில் தோன்றும் ஒரு பரு பல பருக்களாக மாறிவிடுகிறது. அது இன்னும் சில நாட்களில் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகையே கெடுத்துவிடுகிறது. அதனால் இனி கடைகளில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Dark Spots Removal Face Pack in Tamil:
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்யும் அற்புதமான பொருள் என்றால் அது அரிசி தான். அரிசியில் பல ஆரோக்கியம் தரும் சத்துக்கள் இருக்கின்றன. அரிசி கழுவிய தண்ணீர் சருமத்தை பாதுகாக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. அதனால் நாம் இன்று கரும்புள்ளிகளை விரட்ட அரிசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.
உதிர்ந்த முடி அனைத்தும் பல மடங்கு திரும்ப வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும் |
அரிசி எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
1 மணிநேரம் கழித்து அரிசியை கையால் நசுக்கி பார்த்தால் உடைய வேண்டும். அந்த பதத்திற்கு வந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு, அரிசியை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து பாருங்க நீங்களே போதும்னு சொன்னாலும் உங்கள் முடி வளர்ந்துக்கிட்டே போகும் |
பால் சேர்க்கவும்:
அடுத்து ஒரு கிண்ணத்தில் நாம் அரைத்த அரிசி பேஸ்டை சேர்த்து கொள்ளவும். பின் அதில் காய்ச்சாத பால் 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல கலந்து விட வேண்டும்.
பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்யவேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 20 நிமிடம் வரை இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 3 முறையோ அல்லது தொடர்ந்தோ செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும். மேலும் முகத்தில் பருக்கள் வருவதையும் தடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த பேஸ்ட் உங்கள் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது.அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |