Face Whitening Home Remedy
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் பெண்கள் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
அதனால் நாளடைவில் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் கடைகளில் கிடைக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். அந்த வகையில் இயற்கையான பொருட்களை கொண்டு உங்கள் முகத்தை மூன்றே நாட்களில் பொலிவு பெற செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கற்றாழை ஜெல்லை தடவவும்:
முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் வைத்திருந்து பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.
கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவுவதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முக கருமையை நீக்குகிறது.உங்கள் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க..! |
Face Whitening Home Remedy in Tamil:
- பீட்ரூட் – 1
- சாதம் – 3 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
- காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
முதலில் ஒரு பீட்ரூட் எடுத்து கொள்ளவும். அதன் தோலை நீக்கி விட்டு அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ளவும்.
அடுத்து உங்கள் வீட்டில் வடித்த சாதம் இருக்கும் அல்லவா அதை எடுத்து கொள்ளுங்கள். வெள்ளை சாதத்தை 3 டேபிள் ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் மற்றும் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
உங்கள் முகம் அழகாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! |
பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:
இந்த பேஸ்டை உங்கள் முகம், கழுத்து பகுதி மற்றும் கைகளில் கூட அப்ளை செய்து கொள்ளலாம். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
30 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இதுபோல தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.
பீட்ரூட் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் முகத்தில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது. வடித்த சாதம் உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. பால் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.இதுபோல ட்ரை செய்து பாருங்கள். மூன்றாவது நாள் உங்கள் முகத்தில் நல்ல ரிசல்ட் தெரியும்..!
இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை வெள்ளையாக்கலாம் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |