1 ரூபாய் செலவு செய்யாமல் வீட்டிலையே முகத்தை தங்கம் போல் மின்ன வைக்கலாம்..!

facial tips at home in tamil

முகம் அழகு பெற

பண்டிகை நாட்கள், விழா காலங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக  முகத்தை அழகுபடுத்துவதற்கு பெண்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். Beauty Parlaour-க்கு சென்று எவ்வளவு காசு கொடுத்து makeup போட்டாலும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான் அந்த Makeup முகத்தை ஜொலிக்க வைக்கும். அதன் பிறகு இயற்கையான முகம் வந்துவிடும். இயற்கையான முறையில் அழகுபடுத்தினால் நிரந்தரமாக இருக்கும். அழகாகவும் இருக்கும். Makeup போட்ட மாதிரியே இருக்காது. இயற்கையான முறையில் 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் எப்படி Makeup போடுவது என்று இந்த பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள் ⇒ ஆரஞ்சு பழ தோலை வைத்து முகத்தை ஜொலிக்க வைக்க முடியுமா..?

பால் மற்றும் எலுமிச்சைப்பழம்:

 facial tips in tamil

முதலில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். பின் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி பால், எலும்பிச்சை பழம் சாறு எடுத்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் கலந்து வைத்துள்ள கலவையை ஒரு காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து தூய்மையான காட்டன் துணியால் முகத்தை துடைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வந்துவிடும்.

தேன் மற்றும் ரோஸ் வாட்டர்:

 facial tips in tamil

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு காபி தூள், தேன், ரோஸ் வாட்டர் மூன்றையும் சேர்த்து கலக்கவும். காபி தூளுக்கு  பதிலாக  அரிசி மாவு பயன்படுத்தலாம். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். விரல்களால் நன்றாக அழுத்தி மசாஜ் செய்யவும்.

ஆவி பிடித்தல்:

 facial at home in tamil

பின் சூடான தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் இறந்த செல்கள் வெளியேறி சருமம் புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கடலை மாவு மற்றும் தயிர்:

 facial at home in tamil

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கடலை மாவு, தயிர், சந்தனம் மற்றும் தக்காளி சாறு எடுத்து கொள்ளவும். பின் எடுத்து வைத்துள்ள பொருட்களை நன்கு கலக்கவும். பேஸ்ட்டாக வரும் வரை கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின் முகத்தை தண்ணீரால் கழுவுங்கள்.

அவ்ளோ தாங்க மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்யுங்கள். உங்கள் முகம் பளபளன்னு தங்கம் போல் ஜொலிக்கும்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty Tips in Tamil..!