கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய டிப்ஸ்..! Feet Whitening Tips In Tamil..!

Advertisement

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய டிப்ஸ் / feet whitening pedicure at home in tamil..!

Feet whitening tips in tamil:- நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் பெண்களுக்கான ஒரு முக்கிய டிப்ஸை இன்று நாம் பார்க்க போகிறோம்..! பெண்கள் அனைவரும் இப்போ உள்ள காலத்தில் கால்களை பராமரித்து வருவதில் அதிகமாக ஆர்வத்தை செலுத்துகின்றனர். கால்கள் கருப்பாக இருப்பதனால் இனி கவலை வேண்டாம். அதற்காகவே இதோ கருமையாக இருக்கும் பெண்களின் கால்களை வெள்ளையாக மாற்றும் புதுமையான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

newஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..!

Feet whitening tips in tamil..!

டிப்ஸ்:1

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற தேவையான பொருட்கள்:

  1. வெள்ளரிக்காய் – 2

கால் கருமை நீங்க Steps 1:

முதலில் 2 வெள்ளெரிக்காயை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுத்து வெள்ளெரிக்காயை வட்ட வடிவில் கட் செய்து கொள்ளவும்.

கால் கருமை நீங்க (kal karumai Neenga) Steps 2:

தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளெரிக்காயை சிறிதளவு தண்ணீரில் போட வேண்டும்.

பிறகு இதனை ஃப்ரிட்ஜில்(Fridge) 10 நிமிடம் வைக்க வேண்டும்.

கால் கருமை நீங்க (feet whitening pedicure at home) Steps 3:

10 நிமிடம் ஆன பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து வெள்ளெரிக்காயை எடுத்துவிட வேண்டும்.

அடுத்து காலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் பிறகு கால் சுற்றிலும் 5 அல்லது 10 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த வெள்ளெரிக்காயை நன்றாக காலில் தேய்க்கவும்.

கருமையாக இருக்கும் கால்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்றால் இந்த வெள்ளெரிக்காய் டிப்ஸை கண்டிப்பா செய்து பாருங்க..!

new20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..! Skin Whitening Tips in Tamil..!

டிப்ஸ்: 2

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்  
  2. ரோஸ் ஆயில் – சிறிதளவு 

செய்முறை விளக்கம் 1:

முதலில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும். கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு ரோஸ் ஆயிலை சேர்த்து கொள்ளவும்.

இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த ஜெல்லை கால் சுற்றி அனைத்து இடத்திலும் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

செய்முறை விளக்கம் 2:

இந்த ஜெல்லை காலில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். காலில் தடவிய இந்த ஜெல்லை இரவு நேரத்தில் அகற்றி விடலாம்.

கற்றாழை ஜெல் உடலில் உள்ள தோலை புதுப்பிக்க செய்யும் தன்மை கொண்டது. கற்றாழை சருமத்திற்கு மிகவும் சிறந்தது.

இறந்த தோல் செல்களை நீக்கி விட்டு புதிதாக செல்களை உருவாக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த கற்றாழை.

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற:

கற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கிவிடும். அடுத்து சருமத்தை மென்மையாகவும், தெளிவாகவும் வைத்திருக்கும்.

அடுத்து வெள்ளெரிக்காய்  கால் பாதத்தில் உள்ள பிரச்சனை அனைத்திற்கும், தோல் நிறம் வெள்ளையாக மாற்றும் வல்லமை பெற்றது.

வெள்ளெரிக்காய் தோல் நேர்த்தியை அதிகரிக்கும், அதோடு கால்களில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றிவிடும்.

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற (feet whitening pedicure at home) நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பா செய்து பாருங்க. விரைவிலே நல்ல மாற்றம் கிடைக்கும்.

நன்றி வணக்கம்…🙏🙏🙏

newபாத வெடிப்புக்கு இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement