முடி கருமையாக நீளமாக வளர இதை ட்ரை பண்ணுங்க | Hair Growth Tips Natural In Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் தலை முடி உதிராமல் நீளமாக, அடர்த்தியாக வளர வீட்டிலே இயற்கையாக(hair growth tips natural) எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். பொதுவாக பெண்கள் என்றாலே தலை முடி தான் அழகு. இப்போது பெண்கள் அனைவருக்கும் தலை முடி உதிர்வது இயல்பாக மாறிவிட்டது. இந்த முடி உதிர்வு பிரச்சனையை இயற்கையான முறையில் எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
முடி அடர்த்தியாக வளர – தேவையான பொருட்கள்:
- தண்ணீர் – 1 கிளாஸ் அளவு
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
முடி நீளமாக வளர செய்முறை விளக்கம் 1:
முடி அடர்த்தியாக உதிராமல் வளர முதலில் கடாயில் ஒரு பவுலில் 1 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ளவும். அடுத்து அந்த தண்ணீரில் வெந்தயம் 1 ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயம் சேர்த்த பிறகு 1 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் சேர்க்கவும்.
முடி உதிராமல் இருக்க செய்முறை விளக்கம் 2:
தண்ணீரில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்த பிறகு 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாகும் அளவிற்கு வரும்வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக வெதுவெதுப்பான தன்மைக்கு வந்த பிறகு உங்களுக்கு தேவைக்கேற்ற அளவிற்கு தனியாக இந்த கொதிக்க வைத்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
![]() |
முடி கருமையாக வளர டிப்ஸ் செய்முறை விளக்கம் 3:
- இந்த வடிகட்டிய தண்ணீரை மிதமான வெப்பநிலைக்கு வந்த பிறகு தலையில் பயன்படுத்த வேண்டும். அடுத்து கொதிக்க வைத்து வடிகட்டிய நீரின் அடியில் இருக்கும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை அரைத்து பேஸ்ட் போல் செய்து தலை முடி உதிர்வதற்கு இதை தடவி வரலாம்.
முடி உதிர்வதை தடுக்க செய்முறை விளக்கம் 4:
- இப்போது வடிகட்டி வைத்துள்ள நீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்துக்கொள்ளவும். அடுத்து கலந்து வைத்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை குளிக்க போகும் 1 மணி நேரத்திற்கு முன்பாக இதை தேய்த்து 45 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். அடுத்து நார்மல் ஷாம்புவால் தலையை வாஷ் செய்து கொள்ளலாம். இந்த டிப்ஸை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கண்டிப்பாக முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
குறிப்பு:
- வெந்தயத்தில் வைட்டமின் எ, சி, கே அடங்கியுள்ளது. வெந்தயத்தில் போலிக் அமிலம் நிறையவே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் வெந்தயத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துகளும் அடங்கியிருக்கிறது. குறிப்பாக வெந்தயத்தில் ப்ரோடீன், நிகோடின் அமிலம் முடிகளை உதிராமல் பாதுகாக்கும் தன்மை பெற்றது.
- கருஞ்சீரகத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், போலிக் அமில தன்மை, ஜின்க், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், ஆன்டி பாக்டீரியல் அதிகமாக உள்ளது. முடி உதிர்வு பிரச்சனைக்கு கருஞ்சீரகமும் சிறந்த இயற்கை மருத்துவம்.
- எலுமிச்சையானது நமது தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை, தலை முடியில் ஏற்படும் அழுக்குகளை சுத்தம் செய்யும். இதனால் முடி நீளமாகவும் வளர உதவியாக இருக்கிறது.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |