முடி கொத்து கொத்தா கொட்டுதா அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தடவுங்க..!

Hair Oil for Hair Growth Homemade Tamil

முடி கொத்து கொத்தா கொட்டுதா அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தடவுங்க..! Hair Oil for Hair Growth Homemade Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் முடி உதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை வழங்கக்கூடிய ஒரு ஹேர் ஆயில் தயாரிப்பு முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். தலை முடிக்கு சரியான பராமரிப்பு இருந்தாலே போதும் கூந்தல் ஆரோக்கியமாக வளரும். ஆக நமது கூந்தலை ஆரோக்கியமான முறையை அதிகரிக்க தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து அதனை தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர முடி உதிர்வு தடுக்கப்படும், முடி அடர்த்தியாக, நீளமாக மற்றும் அருமையாக வளர ஆரம்பிக்கும். சரி வாங்க அந்த எண்ணெய் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன் 
  2. விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன் 
  3. வைட்டமின் ஈ மாத்திரை – மூன்று

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
வெந்தயத்துடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தலைமுடி அடர்த்தியா கரு கருன்னு வளரும்..!

தயார் செய்யும் முறை:

ஒரு சிறிய சில்வர் பவுலை எடுத்துக்கொள்ளவும் அதில் மேல் கூறப்பட்ட அளவில் தேங்காய் எண்ணெய் நான்கு ஸ்பூன், விளக்கெண்ணெய் 2 ஸ்பூன் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை மூன்று அதன் உள்ளே இருக்குக்கும் திரவத்தை மட்டும் பிளிந்துகொள்ளவும். அவ்வளவு தன இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் கலந்து வைத்த தேங்காய் எண்ணெயை சூடுபடுத்த வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் உள்ளே கலந்து வைத்துள்ள எண்ணெய் பவுலை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

எண்ணெய் ஓரளவு சூடானதும் தனியாக எடுத்து நன்கு ஆறவைக்கவும்.

பின் இரவு உறங்குவதற்கு முன் தயார் செய்த இந்த தேங்காய் எண்ணெயை தலையில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக முடியின் வேர் பகுதியில் எண்ணெயை அப்ளை செய்து அப்படியே உறங்கிவிடவும்.

மறுநாள் காலை எழுந்து தலைக்கு ஷாம்பு போட்டு தலை அலசவும் இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வந்தாலே போதும் முடி நன்கு அடர்த்தியாக நீளமாக வளர ஆரம்பித்துவிடும். இந்த எண்ணெயை நீங்கள் கூந்தல் எண்ணெயாகவும் பயன்படுத்தி வரலாம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
2 மணிநேரத்தில் தலையில் ஒரு நரைமுடி கூட மிச்சம் இல்லாமல் கருப்பாக வேண்டுமா..? அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil