கருமையான கைகளை வெள்ளையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
Hand Whitening at Home in Tamil:- பெரும்பாலும் நம் வீட்டு பெரியவர்கள் நம் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள சொல்வார்கள். அதிலும் குறிப்பாக வெளியே வேலை செய்துவிட்டு அல்லது விளையாடி விட்டு வந்தாலோ, நிச்சயம் வீட்டில் உள்ளவர்கள் கை கால்களை கழுவிய பின்னர் தான் வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது சுத்தத்திற்கு மட்டுமல்ல, கைகள் மற்றும் கால்களுக்கு பாதுகாப்பை அளிக்கவும் தான். பெரும்பாலான வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவற்றை நாம் நன்றாக பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். மேலும் பலருக்கு முகம் வெள்ளையாக இருக்கும் ஆனால் கைகள் மிகவும் கருமையாக அல்லது நிறம் குறைந்து காணப்படும். அப்படி பட்டவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்வதன் மூலம் கைகளின் நிறத்தை அதிகரிக்க முடியும்.
சரி வாங்க கைகளை அழகுபடுத்த சிலவகையான அழகு குறிப்பு டிப்ஸினை (Hand Whitening at Home in Tamil) இங்கு காணலாம்.
பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி? |
Hand Whitening at Home in Tamil..!
ஸ்டேப்: 1
கைகளை அழகுபடுத்த முதலில் நாம் செய்யவேண்டியது கை நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும் அல்லது நகங்களை வெட்டி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
நகங்களை சுத்தம் செய்த பிறகு நகங்கள் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை தடவி லேசாக மசாஜ் செய்யலாம்.
ஸ்டேப்: 2
மாதம் ஒரு முறை கைகளுக்கு மெனிக்யூர் செய்யலாம், இதனால் கைகள் சுத்தமாகவும், கைகளைச் சுற்றியிருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.
இதற்கு ஒரு அகலமான டப்பாவில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின் மையலிடு ஷாம்பு அல்லது பேபி ஷாம்பு ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் தங்களுக்கு விருப்பமிருந்தால் லாவண்டர் எசன்ஷியல் ஆயில் 2 அல்லது 3 துளிகள் அந்த நீரில் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் தங்கள் கைகளை இந்த நீரில் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து கைகளை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பிறகு சுத்தமான நீரால் கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் கைகள் ஈரப்பதத்துடன், இருப்பதுடன், கைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் அகன்று கைகள் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுகிறது.
ஸ்டேப்: 3
கருமையாக இருக்கும் கைகளை கலராக மாற்ற இந்த ஸ்டேப்பை தொடர்ந்து பாலோ பண்ணுங்க அதாவது ஒரு பவுலில் 2 அல்லது 3 ஸ்பூன் காபி பவுடர், 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் மூன்று ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை கைகளில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு கைகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள ஸ்டேபினை தொடர்ந்து செய்து வர கருமையான கைகளை கலராக மாற்றலாம்.
வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி? |
கைகளுக்கான அழகு குறிப்பு டிப்ஸ்:-
1 தினமும் இரவு உறங்குவதற்கு முன் கைகளுக்கு குறைந்தது 5 நிமிடங்களாவது மசாஜ் செய்யலாம் மிகவும் சொரசொரப்பாக இருக்கும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் செய்வது மிகவும் சிறந்த முறையாகும். மாய்ஸ்சுரைசர் செய்வதினால் கைகள் மிகவும் மென்மையாக இருக்கும்.
2 கைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவே பாத்திரங்கள் கழுவும் பொழுது, துணி துவைக்கும் பொழுது, தோட்டத்தில் ஏதாவது வேலை செய்யும் பொழுது கைகளுக்கு இரப்பர் கையுறை அணிந்துக்கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் கைகளை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Natural Beauty Tips |