கற்றாழையை இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் முகம் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாறும்

Advertisement

Home Remedies For Glowing Skin in One Day

மனிதனாக பிறந்த அனைவரும் ஒரே மாதிரியான கலரை கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கலரை கொண்டிருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் முகம் பளபளப்பாக இல்லை என்று தான் கவலைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதிலியே முகம் பொலிவிழந்து காணபடுகிறது. இதனை தடுப்பதற்கு இயற்கையான முறையை கையாள்வது தான்  சிறந்தது. அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தை பளபளப்பாக மாற்றுவது என தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பால்:

Home Remedies For Glowing Skin in One Day in tamil

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் உளுத்தப்பருப்பு மாவு, 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பச்சை பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவி 20 நிமிடத்திற்கு வைத்திருக்கவும். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய்:

Home Remedies For Glowing Skin in One Day in tamil

தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவி விடவும். இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவி விடவும். இது போல் வாரத்தில் இரண்டு முறை இந்த பேக்கை அப்ளை செய்யவும்.

குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த குறிப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

கற்றாழை:

Home Remedies For Glowing Skin in One Day in tamil

கற்றாழை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

மஞ்சள்:

Home Remedies For Glowing Skin in One Day in tamil

 மஞ்சள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பல நோய்களைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகிறது. சருமத்தில் தடவும்போது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் சக்தி இதற்கு உள்ளது. கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, உங்கள் சருமம் இளமையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

ஒரு பவுலில் 4 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு மாவு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி பச்சை பால் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்கவும், பிறகு முகத்தை கழுவ  வேண்டும்.

முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணையுடன் இந்து ஒரு பொருளை கலந்தால் கருப்பாக மாற்றி விடலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement